செய்திகள்

உலகம் முழுவதும் 19 கோடியை தாண்டியது கொரோனா பாதிப்பு

ஜெனீவா, ஜூலை 17–

உலகம் முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டு வருபவர்களின் எண்ணிக்கை 19 கோடியை தாண்டியது.

உலகம் முழுவதும் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டு வருபவர்களின் எண்ணிக்கையும், உயிரிழப்போரின் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. வைரஸ் தொற்றின் இரண்டாவது அலை உருவாகி உலக நாடுகளை அச்சுறுத்தி வருகிறது.

இந்நிலையில் தற்போதைய நிலவரப்படி, உலகம் முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 19 கோடியை தாண்டியுள்ளது. தற்போது 19 கோடியே 2 லட்சத்து 67 ஆயிரத்து 583 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனா பாதிப்பில் இருந்து இதுவரை 17 கோடியே 34 லட்சத்து 77 ஆயிரத்து 758 பேர் குணமடைந்துள்ளனர். மேலும் வைரஸ் தாக்குதலுக்கு இதுவரை 40 லட்சத்து 91 ஆயிரத்து 477 பேர் உயிரிழந்துள்ளனர்.

தொற்றுக்கு தற்போது 1 கோடியே 26 லட்சத்து 98 ஆயிரத்து 348 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். சிகிச்சை பெறுபவர்களில் 79,190 பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது.

ரஷ்யாவில்…

ரஷ்யாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 25,704 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன்மூலம் ரஷ்யாவில் இதுவரை பாதிப்புகளின் எண்ணிக்கை 59 லட்சத்தைக் கடந்துள்ளது. மேலும் ஒரே நாளில் 799 பேர் கொரோனா பாதிப்பால் உயிரிழந்ததால், அங்கு இதுவரை உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 1 லட்சத்து 46 ஆயிரத்து 868 ஆக உயர்ந்துள்ளது. அதே சமயம் ரஷ்யாவில் கொரோனா தொற்றில் இருந்து 53 லட்சத்துக்கும் அதிகமானோர் குணமடைந்துள்ள நிலையில், தற்போது 4.60 லட்சத்துக்கும் மேற்பட்டோர் கொரோனாவிற்கு சிகிச்சை பெற்று வருவதாக அந்நாட்டு சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *