செய்திகள்

உயிரிழந்த 62 போலீசார் குடும்பத்துக்கு தலா ரூ.3 லட்சம்: எடப்பாடி பழனிசாமி உத்தரவு

சென்னை, பிப்.21

உடல் நலக்குறைவு மற்றும் பல்வேறு விபத்துக்களில் உயிரிழந்த 62 போலீசார் குடும்பத்திற்கு தலா ரூ.3 லட்சம் வழங்க முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.

இதுகுறித்து முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

சென்னை பெருநகரக் காவல், வடக்கு கடற்கரை காவல் நிலையத் தலைமைக்காவலராகப் பணிபுரிந்து வந்த ஏ. பாஸ்கர்; அரசு பெரிபெரல் மருத்துவமனை காவல் நிலையத்தில் சிறப்பு உதவி ஆய்வாளராகப் பணிபுரிந்து வந்த கே.சிவராஜ்; ஆவடி டேங்க் பாக்டரி காவல் நிலையத்தில் தலைமைக் காவலராகப் பணிபுரிந்து வந்த ஆ.பிரபாகரன்; கோயம்போடு காவல் நிலையத்தில் தலைமைக் காவலராகப் பணிபுரிந்து வந்த கி. நரேந்திர குமார்; ராஜமங்கலம் காவல் நிலையத்தில் உதவி ஆய்வாளராகப் பணிபுரிந்து வந்த முத்துக்கிருஷ்ணன்;

புழல் காவல் நிலையத்தில் உதவி ஆய்வாளராகப் பணிபுரிந்து வந்த ராம்சிங்; ராயப்பேட்டை காவல் நிலையத்தில் சிறப்பு உதவி ஆய்வாளராகப் பணிபுரிந்து வந்த ஆ.சபாநாதன்; அமைந்தகரை காவல் நிலையத்தில் உதவி ஆய்வாளராகப் பணிபுரிந்து வந்த கா.வைகைமாறன்; அமைந்தகரை போக்குவரத்து காவல் நிலையத்தில் தலைமைக் காவலராகப் பணிபுரிந்து வந்த கி. பழனி;

நவீன காவல் கட்டுப்பாட்டு அறையில் உதவி ஆய்வாளராகப் பணிபுரிந்து வந்த செல்வகுமார் மற்றும் சிறப்பு உதவி ஆய்வாளராகப் பணிபுரிந்து வந்த ச.சங்கர்; சென்னை பாதுகாப்பு பிரிவு குற்றப்புலனாய்வுத் துறையில் சிறப்பு உதவி ஆய்வாளராகப் பணிபுரிந்து வந்த பாபு; பெரியமேடு போக்குவரத்து காவல் நிலையத்தில் சிறப்பு உதவி ஆய்வாளராகப் பணிபுரிந்து வந்த தா.தேவன்; தமிழ்நாடு சிறப்பு காவல் படை 13 ம் அணியில் (பூந்தமல்லி) காவலராகப் பணிபுரிந்து வந்த மு.விஜய்;

கோவை

கோயம்புத்தூர் மாவட்டம், பெரியநாயக்கன்பாளையம் காவல் நிலையத்தில் சிறப்பு உதவி ஆய்வாளராகப் பணிபுரிந்து வந்த பெ.கணேசன்; கடலூர் மாவட்டம், காவல் கட்டுப்பாட்டு அறையில் சிறப்பு உதவி ஆய்வாளராகப் பணிபுரிந்து வந்த கஸ்பர்; தருமபுரி மாவட்டம், நில அபகரிப்பு தடுப்பு பிரிவில் தலைமைக் காவலராகப் பணிபுரிந்து வந்த க.குமரன்;

திண்டுக்கல் மாவட்டம், பழனி நகர் காவல் நிலையத்தில் தலைமைக் காவலராகப் பணிபுரிந்து வந்த கு. அங்கமுத்து; கொடைக்கானல் போக்குவரத்து காவல் நிலையத்தில் உதவி ஆய்வாளராகப் பணிபுரிந்து வந்த ப.ஸ்ரீராம் ரஞ்சித் பாபு; கொடைக்கானல் காவல் நிலையத்தில் முதல் நிலைக் காவலராகப் பணிபுரிந்து வந்த ந. ஜெயசீலன்; திண்டுக்கல் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் முதல் நிலைக் காவலராகப் பணிபுரிந்து வந்த அன்னை இந்திரா; மாவட்ட காவல் கட்டுப்பாட்டு அறையில் தலைமைக் காவலராகப் பணிபுரிந்து வந்த மணிகண்டன்;

ஈரோடு மாவட்டம், வடக்கு போக்குவரத்து காவல் நிலையத்தில் முதல் நிலைக் காவலராகப் பணிபுரிந்து வந்த பா. ஜெகதீசன்; நகர காவல் நிலையத்தில் தலைமைக் காவலராகப் பணிபுரிந்து வந்த ஸ்ரீதரன்; மதுரை மாநகர ஆயுதப்படையில் காவலராகப் பணிபுரிந்து வந்த லி. பிரவீன் குமார்; தல்லாக்குளம் காவல் நிலையக் குற்றப்பிரிவில் தலைமைக் காவலராகப் பணிபுரிந்து வந்த ஜி.பழனிவேல் நாதன்;

மதுரை

மதுரை மாவட்டம், உசிலம்பட்டி தாலுகா காவல் நிலையத்தில் பெண் தலைமைக் காவலராகப் பணிபுரிந்து வந்த பூ. பூங்கா; திருமங்கலம் தேசிய நெடுஞ்சாலைப் போக்குவரத்து பிரிவில் தலைமைக் காவலராகப் பணிபுரிந்து வந்த சி.பூலோக சுந்தர்; நீலகிரி மாவட்டம், திட்டமிட்ட குற்ற நுண்ணறிவுப் பிரிவில் தலைமைக் காவலராகப் பணிபுரிந்து வந்த விஜயகுமார்;

புதுக்கோட்டை மாவட்டம், பனையப்பட்டி காவல் நிலையத்தில் சிறப்பு உதவி ஆய்வாளராகப் பணிபுரிந்து வந்த க.ரெங்கன்; ராமநாதபுரம் மாவட்டம், திருப்புல்லாணி காவல் நிலையத்தில் சிறப்பு உதவி ஆய்வாளராகப் பணிபுரிந்து வந்த வாசுதேவன்; திருவாடானை நெடுஞ்சாலை ரோந்து பிரிவில் சிறப்பு உதவி ஆய்வாளராகப் பணிபுரிந்து வந்த ஆனந்தன்; திருஉத்திரகோசமங்கை காவல் நிலையத்தில் தலைமைக் காவலராகப் பணிபுரிந்து வந்த ஆ. முருகேசன்;

ராணிப்பேட்டை மாவட்டம், வாழப்பந்தல் காவல் நிலையத்தில் தலைமைக் காவலராகப் பணிபுரிந்து வந்த பி.வசந்தகுமார்; சேலம் மாவட்டம், வாழப்பாடி காவல் நிலையத்தில் சிறப்பு உதவி ஆய்வாளராகப் பணிபுரிந்து வந்த இரா.சம்பத்; மேச்சேரி காவல் நிலையத்தில் சிறப்பு உதவி ஆய்வாளராகப் பணிபுரிந்து வந்த பா. சங்கர்; சேலம் மாவட்டம், அறிவுசார் சொத்துடைமைப் பாதுகாப்புப் பிரிவில் தலைமைக் காவலராகப் பணிபுரிந்து வந்த த.திருமூர்த்தி;

தஞ்சாவூர்

தஞ்சாவூர் மாவட்டம், நடுக்காவிரி காவல் நிலையத்தில் சிறப்பு உதவி ஆய்வாளராகப் பணிபுரிந்து வந்த மா. ரவிச்சந்திரன்; திருச்சி மாநகர விபச்சார தடுப்புப் பிரிவில் சிறப்பு உதவி ஆய்வாளராகப் பணிபுரிந்து வந்த எஸ்.ஆரோக்கியசாமி; கே.கே.நகர் காவல் நிலையத்தில் சிறப்பு உதவி ஆய்வாளராகப் பணிபுரிந்து வந்த ஏ. வின்சன்ட்; உறையூர் காவல் நிலையத்தில் தலைமைக் காவலராகப் பணிபுரிந்து வந்த க.கார்த்திகேயன்;

திருப்பூர்

திருப்பூர் மாவட்டம், காமநாயக்கன்பாளையம் காவல் நிலையத்தில் காவலராகப் பணிபுரிந்து வந்த ஜா. மின்ஹாஜூதீன்; திருப்பூர் மாநகர ஆயுதப்படையில் காவலராகப் பணிபுரிந்து வந்த ச.வாசு; திருவண்ணா மலை மாவட்டம், தச்சம்பட்டு காவல் நிலையத்தில் முதல் நிலைக் காவலராகப் பணிபுரிந்து வந்த கு. கார்த்திகேயன்; திருநெல்வேலி மாவட்டம், ஆழ்வார்குறிச்சி காவல் நிலையத்தில் தலைமைக் காவலராகப் பணிபுரிந்து வந்த கல்யாண் சுந்தர்; பத்தமடை காவல் நிலையத்தில் சிறப்பு உதவி ஆய்வாளராகப் பணிபுரிந்து வந்த ஏ. சுடலைமுத்து;

ஆகியோர் உடல் நலக் குறைவால் காலமானார்கள் என்ற செய்தியை அறிந்து நான் மிகுந்த வேதனை அடைந்தேன்.

தமிழ்நாடு சிறப்புக் காவல் படை, 14 ம் அணியில் (பழனி) காவலராகப் பணிபுரிந்து வந்த அ. சுந்தர பாண்டியன்; 7 ம் அணியில் (போச்சம்பள்ளி) காவலராகப் பணிபுரிந்து வந்த இரா.மாரிமுத்து; சென்னை பெருநகர காவல், சேலையூர் காவல் நிலையத்தில் தலைமைக் காவலராகப் பணிபுரிந்து வந்த ரமேஷ்; புதுப்பேட்டை ஆயுதப்படை, ‘இ’ நிறுமம், 17 ம் அணியில் இரண்டாம் நிலைக் காவலராகப் பணிபுரிந்து வந்த பா. திருலோகசந்தர்;

ஆயுதப்படையில் காவலர்களாகப் பணிபுரிந்து வந்த திரு. பா. ரவீந்திரன் மற்றும் வீ. கார்த்திக்; வடக்கு கடற்கரை காவல் நிலையத்தில் முதல் நிலைக் காவலராகப் பணிபுரிந்து வந்த திரு. கு. பிச்சாண்டி; ஈரோடு மாவட்டம், வடக்கு போக்குவரத்து காவல் பிரிவில் தலைமைக் காவலராகப் பணிபுரிந்து வந்த சு. செந்தில்குமார்;

கன்னியாகுமரி

கன்னியாகுமரி மாவட்டம், ஆயுதப்படையில் இரண்டாம் நிலைக் காவலராகப் பணிபுரிந்து வந்த காட்வின் டோனி; மதுரை மாநகரம், ஆயுதப்படையில் பெண் தலைமைக் காவலராகப் பணிபுரிந்து வந்த உமா வாசுகி; பெரம்பலூர் மாவட்ட தனிப்பிரிவு குற்றப்புலனாய்வுத் துறையில் சிறப்பு உதவி ஆய்வாளராகப் பணிபுரிந்து வந்த பெரியசாமி;

ராமநாதபுரம் மாவட்டம், ஆயுதப்படையில் காவலராகப் பணிபுரிந்து வந்த பா. சிவக்குமார்; சிவகங்கை மாவட்டம், திருவேகம்பத்தூர் காவல் நிலையத்தில் தலைமைக் காவலராகப் பணிபுரிந்து வந்த நாகராஜன்; தென்காசி மாவட்டம், அச்சன்புதூர் காவல் நிலையத்தில் சிறப்பு உதவி ஆய்வாளராகப் பணிபுரிந்து வந்த செ. தம்பிதுரை;

திருநெல்வேலி மாவட்டம், நாங்குநேரி காவல் நிலையத்தில் காவலராகப் பணிபுரிந்து வந்த ஆறுமுகம்; விழுப்புரம், சமூக நீதி மற்றும் மனித உரிமைகள் பிரிவில் சிறப்பு உதவி ஆய்வாளராகப் பணிபுரிந்து வந்த நா. ஆறுமுகம்;

ஆகியோர் பல்வேறு விபத்துகளில் உயிரிழந்தனர் என்ற செய்தியையும் அறிந்து நான் மிகுந்த மிகுந்த வேதனை அடைந்தேன்.

உடல் நலக் குறைவு மற்றும் விபத்துகளில் உயிரிழந்த 62 காவலர்களின் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும் அனுதாபத்தையும் தெரிவித்துக்கொள்கிறேன்.

மேற்கண்ட சம்பவங்களில் உயிரிழந்த 62 காவலர்களின் குடும்பத்தினருக்கு தலா மூன்று லட்சம் ரூபாய் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்க நான் உத்தரவிட்டுள்ளேன்.

இவ்வாறு எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *