போஸ்டர் செய்தி

உத்திரபிரதேச முன்னாள் முதல்வர் என்.டி.திவாரியின் மகன் கொலை: மனைவியிடம் விசாரணை

பாட்னா, ஏப். 20–

மறைந்த முன்னாள் உத்திரபிரதேச முதல்வர் என்.டி.திவாரியின் மகன் ரோஹித் திவாரி தலையணையால் முகத்தில் அமுக்கி கொல்லப்பட்டிருக்கலாம் என தெரிய வந்துள்ள நிலையில் அவரது மனைவி அபூர்வாவிடம் போலீஸார் இன்று விசாரணை நடத்தி வருகின்றனர்.

உத்தரகண்ட் மாநிலம் நைனிடாலைச் சேர்ந்தவர் என்.டி.திவாரி. உத்திரபிரதேசத்தில் காங்கிரஸ் சார்பில் முதல்வராக 3 முறை இருந்தவர். கடந்த 2008-ல் ஆந்திர கவர்னராக இருந்த திவாரி, தனது தந்தை என ரோஹித் சேகர் டெல்லி உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தபோது பலரும் அதிர்ந்தனர்.

ஹரியானா மாநில முன்னாள் அமைச்சரின் மகளான உஜ்வல் தங்கியிருந்த வீட்டில் திவாரி புதிய எம்பியாக குடியேறினார். அப்போது அரசு வீட்டை காலி செய்யாமல் இருந்த உஜ்வலுக்கும் திவாரிக்கும் இடையே காதல் வளர்ந்ததாக கூறபப்பட்டது. அதன் விளைவாக ரோஹித் பிறந்ததாகவும் பின்னர் தெரிய வந்தது. இதை திவாரி மறுத்து வந்தபோதும், மரபணு சோதனையில் உறுதி செய்யப்பட்டது. என்.டி திவாரி 2018-ம் ஆண்டு உயிரிழந்தார்.

இந்தநிலையில் தனது தந்தை என்.டி திவாரி என போராடி நிரூபித்த மகன் ரோஹித் சேகர் திடீரென மரணமடைந்தார். அவரது உடலில் சில காயங்கள் இருந்ததால் பிரேத பரிசோதனைக்கு உத்தரவிடப்பட்டது. அதில், ரோஹித் திவாரியின் பிரேதப் பரிசோதனை அறிக்கையில் இயற்கை மரணம் அல்ல என்று கூறப்பட்டது. தலையணையால் முகத்தில் வைத்து அமுக்கியதால், மூச்சு திணறி அவர் உயிரிழந்திருக்கலாம் என தெரிய வந்துள்ளது. இதையடுத்து இது கொலையாக இருக்கலாம் என்ற கோணம் எழுந்துள்ளது. வழக்கும் குற்றப்பிரிவுக்கு மாற்றப்பட்டு விட்டது.

அப்போது வீட்டில் ரோஹித் மனைவி அபூர்வா, அவரது உறவினர் சித்தார்த், வீட்டுப் பணியாளர்கள் வீட்டில்தான் இருந்துள்ளனர். இது தொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்து ரோகித் சேகர் திவாரி வீட்டில் உள்ள கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்து வருகின்றனர். ரோகித் சேகர் திவாரியின் மனைவியிடமும் டெல்லி குற்றப்பிரிவு போலீசார் விசாரித்து வருகின்றனர்.

சம்பவம் நடப்பதற்கு ஒரு சில மணி நேரம் முன்னதாக நிருபர்களிடம் கணவனுடன் பேசியதாக அபூர்வா தெரிவித்தார்.

அபூர்வா இப்போது ஹரித்வாரில் தன் குடும்பத்துடன் இருக்கிறார். கணவரின் மறைவையொட்டி இறுதிச் சடங்குகளுக்காக சென்றிருக்கிறார்.

உத்தரகாண்டிலிருந்து திங்கட்கிழமை ரோஹித் வந்தார். மிகவும் களைப்பாக இருப்பதாகவும், தலை வலி இருப்பதாகவும் கூறினார். தலையைப் பிடித்து விடுமாறு என்னிடம் கேட்டுக் கொண்டார். பின்னர் அம்மாவைப் போய்ப் பார்த்துவிட்டு படுக்கப் போனார். நான் அதிகாலை 2.30 மணிக்குத் தான் தூங்கினேன். மறுநாள் எழுந்தேன் என்று கூறினார்.

மறுநாள் செவ்வாய்க்கிழமை பொழுது விடிந்ததும் கணவன் ரோஹித்தைப் பார்த்தீர்களா என்று கேட்டதற்கு அவர் பதில் எதுவும் தரவில்லை மவுனமாக இருந்து விட்டார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *