வாழ்வியல்

உணவில் உப்பை அதிகமாக சேர்ப்பதால் ஏற்படும் தீங்கு!

உணவில் அதிக உப்பு எடுத்தால் உயர் ரத்த அழுத்தம் ஏற்படுகிறது. ஒருவருக்கு நாளொன்றுக்கு அதிகபட்சமாக ஒன்றரை தேக்கரண்டி உப்பு போதுமானது. ஆனால், தென்னிந்தியாவிலோ தினசரி 20 கிராம் வரை உப்பை உணவில் சேர்த்துக்கொள்கிறோம்.

சமையல் உப்பு: சோடியம் – 40%, குளோரைடு – 60%, நாளொன்றுக்கு நமக்குத் தேவையான சோடியம் அளவு 4 மி.கி. மட்டுமே. ஒரு தேக்கரண்டி சமையல் உப்பில் 2.3 மி.கி. சோடியம் உள்ளது. நாம் சாப்பிடும் உணவில் உப்பின் அளவு 4 மி.கிராம் அளவைத் தாண்டினால், அது சிறுநீரகத்தை பாதிக்கும்.

சிறுநீரகப் பாதிப்பு உள்ளவர்களுக்கு, இன்னும் குறைவாகவே சோடியம் தேவைப்படும். உடலில் ரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்துவதில் சிறுநீரகத்துக்கு அதிக பங்கு உண்டு. ‘ரெனின்ஆஞ்சியோடென்சின் ஆல்டோஸ்டீரான் அமைப்பு’ என்று ஒரு அமைப்பு நம் உடலில் உள்ளது. இதுதான் ரத்த அழுத்தத்தை எப்போதும் கட்டுப்பாட்டில் வைத்துக்கொள்கிறது.

உயர் ரத்த அழுத்தம்: இதில் ரெனின், ஆஞ்சியோடென்சின் ஆகிய இரண்டும் உடலில் ரத்தக்குழாய்களை சுருங்கி விரியச்செய்கின்றன. இவை சரியாகச் சுரந்தால், ரத்தக் குழாய்களும் சரியாகவே சுருங்கி விரியும். அதிகமாகச் சுரந்தால், ரத்தக் குழாய்கள் ஒரேயடியாக சுருங்கிவிடும். இப்படி சுருங்கிப் போன ரத்தக்குழாயில் ரத்த அழுத்தம் அதிகரிக்கும்.

உப்பு உடலில் அதிகமானால், அதிலுள்ள சோடியமானது, ரெனின், ஆஞ்சியோடென்சின் சுரப்பதை அதிகப்படுத்திவிடும். இதனால் ரத்தக்குழாய்கள் ஒரேயடியாகச் சுருங்கி ரத்த அழுத்தத்தை அதிகரித்துவிடும். அடுத்த காரணம், உப்பு அதிகரிக்கும்போது, அதிலுள்ள அதீத சோடியம் உடல் செல்களிலுள்ள தண்ணீரை ரத்த ஓட்டத்துக்கு கொண்டுவந்துவிடும்.

இதனால் ரத்தத்தில் தண்ணீர் அளவு அதிகமாகி, அதில் அழுத்தம் அதிகரித்துவிடும். இதன் விளைவாலும், ரத்த அழுத்தம் அதிகரிக்கும். இப்படி இன்னும் பல வழிகளில் உடலில் உப்பு அதிகமானால் ரத்த அழுத்தம் அதிகரிக்கிறது.

தவிர்க்க வேண்டிய உணவுகள்:

உப்பு நிறைந்த உணவுப் பொருட்களான, ஊறுகாய், கருவாடு, அப்பளம். உப்புக்கண்டம், வடாகம், சிப்ஸ், சாஸ், பாப்கார்ன், சேவு பதப்படுத்தப்பட்ட உணவு, பாக்கெட் உணவு, துரித உணவு, செயற்கை வண்ணம் சேர்க்கப்பட்ட உணவுகள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *