செய்திகள்

உடல் நலக்குறைவால் நடிகர் கார்த்திக் மருத்துவமனையில் அனுமதி

சென்னை, ஏப்.6-

நடிகர் கார்த்திக் மீண்டும் உடல்நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

மனித உரிமை காக்கும் கட்சி நிறுவனர் நடிகர் கார்த்திக், கடந்த 2 வாரத்துக்கு முன்பு மூச்சுத்திணறல் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். தீவிர சிகிச்சைக்கு பின்பு வீடு திரும்பினார்.

இதைத்தொடர்ந்து, அண்ணா தி.மு.க. வேட்பாளர்களை ஆதரித்து மதுரை, ராஜபாளையம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் அவர் பிரச்சாரத்தில் ஈடுபட்டார்.

இந்த நிலையில் நேற்று அவருக்கு மீண்டும் உடல் நலக்குறைவு ஏற்பட்டது. இதைத் தொடர்ந்து சென்னை அடையாறில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு அவருக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *