வாழ்வியல்

உடல் எடையை குறைக்க உதவிடும் எளிய வழிகள்–2

Spread the love

* லிப்டைத் தவிருங்கள்:

இன்றைக்கு பெரும்பாலானோர் ஏ.சி பஸ் அல்லது காரில்தான் பயணம் செய்கிறார்கள். இது வியர்வை வெளியேற தடையாக இருக்கும். உடல் உழைப்பும் குறைந்துவிட்டது. எனவே அலுவலகத்தில் லிஃப்ட் பயன்படுத்தாமல் படிக்கட்டுகளைப் பயன்படுத்துவது நல்லது. தொடக்கத்தில் இது கடினமாக இருந்தாலும் பழகினால் சரியகி விடும்.

* காய்கறிகளை அதிகமாக சாப்பிடுங்கள்

சீஸ், பட்டர் போன்ற கொழுப்புச்சத்து நிறைந்த உணவுகளை குறைத்துக் கொள்ளுங்கள். காலை மற்றும் இரவு வேளைகளில் காய்கறி, பழங்களையோ சாலட்டுகளையோ சாப்பிடுவது நல்லது.

* வறுத்த, பொரித்த உணவு வேண்டாம்

சிக்கன் 65, போண்டா, பஜ்ஜி போன்ற எண்ணெயில் பொறித்த உணவுகளை முற்றிலும் தவிர்க்க வேண்டும். எண்ணெய் உணவுகள்தான் உடல் பருமனுக்கு முக்கியக் காரணம்.

* தண்ணீர் அவசியம்:

உடலின் சீரான செயல்பாட்டுக்குத் தேவையான அளவு தண்ணீர் அருந்துவது மிகவும் அவசியம். மனித உடல் 70 சதவிகிதம் தண்ணீரால் ஆனது. எனவே தினமும் எட்டு டம்ளர் தண்ணீர் அருந்துவது உடலை ஆரோக்கியமாகவும் புத்துணர்ச்சியோடும் வைத்திருக்க உதவும். உடலில் நீரிழப்பு ஏற்படாமல் பார்த்துக்கொள்ளவும் முடியும்.

* நிறைவான தூக்கம் தேவை:

எட்டு மணி நேர தூக்கம் அத்தியாவசியமானது. அதிலும் பெண்களுக்கு 8-10 மணிநேரம் வரை தூக்கம் கண்டிப்பாகத் தேவை. அமைதியான தூக்கம் இல்லையென்றால் கடும் சோர்வு ஏற்படும். வேலைகளில் சரியாகக் கவனம் செலுத்த இயலாமல் போய்விடும். தூக்க நேரத்தை குறைத்துக் கொண்டு வேலை செய்வதைத் தவிர்க்க வேண்டும்.

* சீரான நடைபயிற்சி

காலை எழுந்ததும் முக்கால் மணி நேரம் நடைப்பயிற்சி செய்வதை வழக்கமாக வைத்துக் கொள்ளுங்கள். சாப்பிட்டு முடித்ததும் ஏழு முதல் பத்து நிமிடங்கள் மெதுவாக நடக்கலாம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *