வாழ்வியல்

உடலில் உறுதி – சுறுசுறுப்பு உண்டாக என்ன செய்ய வேண்டும்?

உடலில் உறுதியும் தேக மினுமினுப்பும் சுறுசுறுப்பும் உண்டாக வேண்டுமானால் வெந்தயம், ஓமம், கருஞ்சீரகம் கலவையை 2-3 மாதங்கள் சாப்பிட்டால் போதும்.

வெந்தயம் 250 கிராம், ஓமம் 100 கிராம், கருஞ்சீரகம் 50 கிராம் ஆகியவற்றை வறுத்து தூள் செய்து ஒன்றாக கலந்து பாட்டிலில் வைத்துக் கொள்ள வேண்டும். இதை நாள்தோறும் ஒரு ஸ்பூன் அளவு இரவில் மிதமான சுடுநீரில் போட்டு குடித்து வந்தால் உடலில் உறுதியும் தேக மினுமினுப்பும், சுறுசுறுப்பும் உண்டாகும். எலும்புகள் உறுதியடைந்து எலும்பு தேய்மானம் நீங்கும். ஈறுகளில் உள்ள பிரச்சனைகள் நீக்கப்பட்டு பற்கள் வலுவடையும். கண் பார்வை தெளிவடைந்து, நல்ல முடி வளர்ச்சி உண்டாகும். மலச்சிக்கல் நீங்கி, நினைவாற்றல் மேம்படும். கேட்கும் திறன் அதிகரிக்கும். பெண்கள் சம்மந்தப்பட்ட நோய்கள் நீங்கும். பாலியல் பலவீனங்கள் நீங்கிவிடும். நீரிழிவு நோய் கட்டுப்படுத்தும். வெந்தயம், ஓமம், கருஞ்சீரகம் கலவையை 2-3 மாதங்கள் தொடர்ந்து சாப்பிடும் போது நாட்பட்ட வியாதிகள் அனைத்தும் குறைகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *