செய்திகள்

உக்ரைனின் 20 சத நிலப்பரப்பை ரஷ்யா ஆக்கிரமித்துள்ளது: அதிபர் ஜெலன்ஸ்கி தகவல்

கீவ், ஜூன் 3–

உக்ரைனின் 20 சத நிலப்பரப்பை ரஷ்யா ஆக்கிரமித்துள்ளது என்று காணொளியில் பேசிய அதிபர் ஜெலன்ஸ்கி கூறியுள்ளார்.

உக்ரைன் – ரஷ்யா இடையேயான போர் 100 நாட்களை தாண்டி நடைபெற்று வருகிறது. ரஷ்யாவின் தொடர் தாக்குலால், உக்ரைனின் முக்கிய நகரங்கள் உருகுலைந்து காணப்படுகிறது.

20 சத நிலம் ஆக்ரமிப்பு

இந்நிலையில், காணொலி காட்சி மூலம் பேசிய உக்ரைன் அதிபர் ஜெலென்ஸ்கி, உக்ரைனின் 20 சதவீதப் நிலப்பரப்பை ரஷ்யா ஆக்கிரமித்துள்ளதாக தெரிவித்தார். தற்போது நடைபெற்று வரும் போரினால், 3 லட்சம் சதுர கி.மீ. பகுதிகளில் கண்ணி வெடிகள் மற்றும் வெடிக்காத வெடிகுண்டுகள் நிரம்பியுள்ளதாக தெரிவித்தார்.

உக்ரைன் மீதான ரஷ்யாவின் ராணுவ நடவடிக்கையால், ஒரு கோடியே 20 லட்சம் உக்ரேனியர்கள் இடம் பெயர்ந்துள்ளனர் என்றும், 50 லட்சத்துக்கும் அதிகமானவர்கள் வெளிநாடுகளுக்குச் சென்றுள்ளதாகவும், ஜெலென்ஸ்கி தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published.