செய்திகள்

இஸ்ரேலில் மத நிகழ்ச்சி கூட்ட நெரிசலில் சிக்கி 44 பேர் பலி

நூற்றுக்கும் மேற்பட்டோர் படுகாயம்

ஜெருசலேம், ஏப். 30–

இஸ்ரேலில் இன்று காலையில், மவுண்ட் மெரான் என்ற பகுதியில், ஆண்டுதோறும் நடைபெறும் மத நிகழ்ச்சியில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 44 பேர் உயிரிழந்த நிலையில், 100-க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர்.

இஸ்ரேலில், வடக்கே மவுண்ட் மெரான் என்ற பகுதியில் இன்று காலையில் ஆண்டுதோறும் நடைபெறும் ‘லாக் பி’ ஓமர் நினைவு தினங்களுக்காக அவருடைய கல்லறை பகுதியில் ஆயிரக்கணக்கான ஆர்த்தடாக்ஸ் யூதர்கள் கூடி இருந்தனர். 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் கலந்து கொண்ட கொண்ட நிலையில், திடீரென கூட்ட நெரிசல் ஏற்பட்டுள்ளது. இந்த கூட்ட நெரிசலில் சிக்கி 44 பேர் உயிரிழந்த நிலையில், 100-க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர்.

எலிகாப்டரில் மீட்புப் பணி

இதனையடுத்து, தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த மீட்புக்குழுவினர், 6 ஹெலிகாப்டர்கள் மற்றும் 20-க்கும் மேற்பட்ட ஆம்புலன்ஸ்கள் மூலம், பாதிக்கப்பட்டவர்களை மீட்டனர். அவர்களை சபீத் பகுதியில் உள்ள ஜிவ் மருத்துவமனை மற்றும் நகாரியா பகுதியில் உள்ள கலிலீ மருத்துவ மையம் ஆகியவற்றில் சேர்த்துள்ளனர்.

இதில் பாதிக்கப்பட்டவர்களில் 100 பேர் தீவிர சிகிச்சை பிரிவில் உள்ள நிலையில், இந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த உயிரிழப்பு குறித்து பேசிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு, இது மிகப்பெரிய பேரழிவு என்று தனது வருத்தத்தை பதிவு செய்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *