சென்னை, மார்ச் 20–
இந்தியாவில் வாழும் இலங்கைத் தமிழர்களுக்கு இரண்டாம் கட்டமாக 3,959 வீடுகளைக் கட்ட, வரும் நிதியாண்டில் 223 கோடி ரூபாயை அரசு வழங்கும் என்று நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தெரிவித்தார்.
நடப்பு ஆண்டுக்கான பட்ஜெட்டை தாக்கல் செய்து அவர் பேசுகையில், இலங்கைத் தமிழர்களுக்கு இந்தியக் குடியுரிமை அளிக்கப்ட வேண்டும் என்று தொடர்ந்து ஒன்றிய அரசை வலியுறுத்தி வருகின்றோம். இந்த கோரிக்கை நிறைவேறும் வரையிலும் அவர்களுக்கு, பாதுகாப்பான, தரமான தங்குமிடங்களை வழங்கும் நோக்கத்துடன் மறுவாழ்வு முகாம்களில் 7,469 புதிய வீடுகள் கட்டப்படும் என அரசு அறிவித்திருந்தது. இதன் முதற்கட்டமாக, 3,510 வீடுகளுக்கான பணிகள் 176 கோடி ரூபாய் மதிப்பீட்டில் நடைபெற்று வருகின்றன என்றார்.