டெல்லி, பிப். 4–
இருவரின் சம்மதத்தில் நடந்த உறவுகளைப் பலாத்காரமாக கருத முடியாது என உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.
தன்னை திருமணம் செய்து கொள்வதாக உறுதி அளித்து பலாத்காரம் செய்ததாக, டெல்லி பெண் தொடர்ந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவரை உச்ச நீதிமன்றம் விடுதலை செய்துள்ளது. மேலும் இருவரின் சம்மதத்துடன் நடக்கும் உறவுகளை பலாத்காரமாக கருத முடியாது என்றும் நீதிமன்றம் தெரிவித்தது.
விடுதலை செய்த நீதிமன்றம்
குற்றம் சாட்டப்பட்டவர் தன்னை திருமணம் செய்து கொள்வதாக உறுதியளித்ததால், அமைதியாக இருந்ததாகவும், அவர்கள் கணவன் மனைவி போல் வாழ்ந்ததாகவும் அந்த பெண் கூறினார். இதனிடையே, அவருக்கு மற்றொரு பெண்ணுடன் திருமணம் நடைபெற இருந்ததால், ஒரு வாரத்திற்கு முன்னதாகவே தன்னை பாலியல் பலாத்காரம் செய்ததாகவும், திருமணம் செய்வதாக கூறி ஏமாற்றியதாகவும் வழக்கு பதிவு செய்ததாக அந்த பெண் கூறினார்.
இது குறித்து ஆர்.எஃப் நாரிமன், நவின் சின்ஹா மற்றும் இந்திரா பானர்ஜி அடங்கிய நீதிபதிகள் அமர்வு கூறியதாவது:– “எங்கள் கருத்துப்படி, எஃப்ஐஆர் பதிவு செய்வதில் 4 ஆண்டுகள் தாமதமானதால், புகார்தாரர் சுமத்தியுள்ள குற்றச்சாட்டுகளின் மீது சந்தேகம் ஏற்பட்டுள்ளது எனவும், இருவரின் சம்மதத்துடன் நடந்த உறவுகளைப் பலாத்காரமாக கருத முடியாது என்றும் உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கி அந்த நபரை விடுதலை செய்தது.