சிறுகதை

இருபத்தியோரு நாட்கள் | தர்மபுரி சி.சுரேஷ்

Spread the love

லாரி டிரைவர் ராஜேஷ் எப்பொழுதும் பயணித்துக் கொண்டே இருப்பான் குறிப்பாக அவனுடைய பயணம் வடமாநிலங்களை நோக்கியே இருக்கும்

வீட்டிற்கு வந்தால் மாதத்தில் ஓரிரு நாட்கள் மட்டுமே குடும்பத்தோடு செலவு செய்வான்.

அவனுடைய இரு சிறு பிள்ளைகளான சதீஷ், சுமிதா இவர்கள் அப்பாவின் அன்புக்காக ஏங்கிக் கொண்டிருப்பார்கள்.

மனைவி மகாலட்சுமியும் தன் கணவன் தன்னுடன் அதிகமான நேரத்தை செலவிடுவது இல்லையே என வருத்தப்பட்டது உண்டு.

ராஜேஷும் பிள்ளைகளோடும் மனைவியோடும் அதிக நாட்கள் இருக்க வேண்டும் என ஆசைதான் இருந்தாலும் அவன் வேலை அப்படி இல்லையே

ஆனால் இன்றோ அவனுடைய முதலாளி அவனை அழைத்து

“ராஜேஷ் இன்னையிலிருந்து இருபத்தியோரு நாட்களுக்கு நீ லாரி ஓட்டாதே. உங்க வீட்டிலேயே பொண்டாட்டி புள்ளைங்களோட நேரத்தை செலவு பண்ணுப்பா”

“முதலாளி என்ன சொல்றீங்க”பதறினான்

“பயப்படாதப்பா. நாட்டு நலனுக்காகத்தான் இதை நான் சொல்றேன். இந்தா இந்த நியூஸ் பேப்பர் படிச்சுப் பாரு ”

அதில் கொட்டை எழுத்தில் கொரொனா வைரஸ் என எழுதப்பட்டிருந்தது.

அதைப் படித்து முடித்த ராஜேஷுக்கு ஒரு பக்கம் சந்தோசம் இருந்தாலும் இன்னொரு பக்கம் வேதனையாகவும் இருந்தது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *