அறிவியல் அறிவோம்
2018 ம் ஆண்டு அமெரிக்காவின் வடக்கு கலிபோர்னியாவில் பெரும் தீவிபத்து உண்டானது. டிரான்ஸ்பார்மரில் ஏற்பட்ட பழுதே இதற்கான காரணம் எனத் தெரிய வந்தது. இந்த பிழையை வழக்கமான பரிசோதனைகளில் கண்டறிந்திருக்கலாம் என்றாலும் தவறு ஏற்பட்டு விட்டது. இத்தகைய நிலையை தவிர்ப்பதற்காக ரோபோ தயாரிப்பு நிறுவனமான ’பெர்சப்டோ எய்ம்’ எனும் மென்பொருள் அமைப்பை உருவாக்கியுள்ளது.
செயற்கை நுண்ணறிவு திறன் கொண்ட இந்த மென்பொருள் டிரோன்கள் மற்றும் ரோபோக்கள் மூலம் தொழிற்சாலைகள், மின்சார அமைப்புகள் உள்ளிட்டவற்றை அடிக்கடி ஆய்வு செய்து அவற்றில் பழுது ஏற்படாமல் இருப்பதை உறுதி செய்கிறது. இந்த டிரோன் வழி கண்காணிப்பு மூலம் சுற்றுச்சூழல் விபத்துகளை பெருமளவில் தவிர்க்கலாம் என நம்புகின்றனர்.இருதயம் காப்போம்!
இருதய சோனோகிராம் கருவி மூலம், இருதய கோளாறுகளைக் கண்டறிந்து சிகிச்சை அளித்து உயிர் காக்கலாம். ஆண்டுதோறும் இதனால் 14 லட்சம் பேர் இறப்பதாக புள்ளிவிவரங்கள் இருக்கின்றன. ஆனால், பெரும்பாலான ஏழை நாடுகளில், இந்த கோளாறை கண்டறிவதற்கான போதிய கருவிகளும் இல்லை, அவற்றை கையாள்வதற்கான பயிற்சி பெற்ற பணியாளர்களும் இல்லை.
இந்த குறையை போக்கும் வகையில் ’கேப்ஷன் ஏ.ஐ’ செயல்படுகிறது. கையடக்க அல்ட்ரா சவுண்ட் சாதனங்களுடன் செயல்படக்கூடிய இந்த மென்பொருள் இதயத்தை படம் பிடித்துக்காட்டி மருத்துவர்கள் நோயாளி உடலில் உள்ள பிரச்சனைகளைக் கண்டறிந்து சிகிச்சை அளிக்க உதவுகிறது. இந்த சாதனம் மூலம், மருத்துவ மையங்கள் மூலமே இதய பரிசோதனைகளை மேற்கொள்வது சாத்தியம் என்கின்றனர்.