செய்திகள்

இருதய துடிப்பை எந்நேரமும் கண்காணிக்கும் வசதியுடன் ரூ.1499 விலையில் லெனோவா புதிய ஸ்மார்ட் வாட்ச் அறிமுகம்

சென்னை, ஜூலை 8–

ஸ்மார்ட் வாட்ச் தயாரிப்பில் ஈடுபட்டுள்ள லெனோவா நிறுவனம், புதியதாக 24 மணி நேரமும் இருதய துடிப்பை கண்காணிக்க ‘கார்டியோ 2’ என்ற புதிய ஸ்மார்ட் வாட்ச்சை அறிமுகம் செய்துள்ளது. இதை செல்போனில் செயலி மூலம் இணைந்து போன் அழைப்பு வருவதை கடிகாரத்தில் பார்க்கலாம். நீண்ட நேரம் உட்கார்ந்து இருந்தால் எழுந்து நடக்க அறிவுறுத்தும். ஒரு தடவை சார்ஜ் செய்தால் 20 நாளைக்கு சார்ஜ் செய்ய தேவை இல்லை. வாட்டர் புரூப் கொண்ட ஸ்மார்ட் பேண்ட் புட்ளஸ் வாட்ச் இது என்று இதன் சர்தேச பொது மேலாளர் ஜிஇசென்சு தெரிவித்தார்.

நேரம் பார்ப்பதுடன், உடல் ஆரோக்கியம், உடற்பயிற்சி வசதிகளை டிஜிட்டல் முறையில் லெனோவா ‘கார்டியோ 2’ டிஜிட்டல் ஸ்மார்ட் வாட்ச் வழங்குகிறது.

இந்த விலையில் இது போன்று லெனோவா மூலம் அறிமுகம் நல்ல வரவேற்பை பெறும். நடத்தல், ஓடுதல், உடற்பயிற்சி போன்றவற்றை கண்காணிக்க முடியும். குறுந்தகவல், போன் அழைப்பு செல்போனில் வருவதை இதில் பார்க்க முடியும்.

இந்த ஸ்மார்ட் வாட்ச் பட்டையை கழற்றினால், இதன் தகவல்களை நேரடியாக கம்ப்யூட்டரில் ‘யுஎஸ்பி’ போல பொருத்தி பதிவிறக்கம் செய்வதுடன், சார்ஜ் செய்யலாம். என்றும் அவர் தெரிவித்தார்.

இது அமேசான் வலைதளத்தில் கிடைக்கிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *