செய்திகள் வாழ்வியல்

இயற்கை விவசாயம்

Spread the love

அன்றைய தலைமுறை விவசாயிகள் தொன்றுதொட்டு செய்து வந்த முறையில் இயற்கை விவசாயத்தை தொடர்ந்து செய்து வந்தனர்.

விவசாயத்திற்குத் தேவையான எல்லா வசதிகளையும் தேவைகளையும் இயற்கையே அளிக்கிறது.

முக்கியமாக விவசாயம் செய்யத் தேவை நிலம் தான். அதற்கடுத்து நீர், விசாயம் உரங்கள், உழைக்க மனிதர்கள், கால் நடைகள் , வேளாண்கருவிகள்.

கடந்த காலங்களில் ‘குருவை சம்பா’ என இருபோக விவசாயம் செய்து வந்தனர் . பயிர்களின் ஆயுள் காலமும் அதிகமான நாட்கள் இருந்தன. 5 அல்லது 6 மாதம் சாகுபடி காலமுள்ள பயிர் சாகுபடி செய்ததால் அறுவடையாகும் நெல் தரமும் சுவையும் சத்துக்களும் நிறைந்து இருந்தன.

இந்த மாதிரி உணவுகளை உண்டதனால் மக்களுக்கு ஆரோக்கியம் நன்றாக இருந்தது. நோய் நொடிகள் தாக்கப்படாமல் இருந்தது.

குழந்தைகள் முதல் முதியவர்கள் வரை ஆரோக்கியமாக வாழந்து வந்தார்கள். மண்ணின் தரமறிந்து பயிர் செய்து வந்த காலம் எந்த பருவத்தில் என்ன பயிர் சாகுபடி செய்தால் நல்லது என்று அறிந்து ஆராய்ந்து பயிர்செய்து வந்தனர்.

எந்த மண்ணில் என்ன பயிர் செய்தால்! என்ன லாபம்! கிடைக்கும் என்று திட்டமிட்டு விவசாயம் செய்த வந்தனர்.

உற்பத்திச்செலவை குறைத்து விளைபொருள் செலவை அதிகரித்து லாபம் பெற்று வந்தனர்.

விவசாயத்திற்கு முக்கிய ஆதாரம் மண் தான்.. மண்ணின் உயிர் சத்து பாதிக்காதவாறு உரங்களைப் பயன்படுத்த வேண்டியது அவசியம் . சரியான காலத்தில் தேவையான தண்ணீரைப் பாய்ச்சுவது முக்கியமாகும்.

பயிரில் பூச்சிகள் வந்து தாக்குவதற்கு முன் அதனைக் கட்டுப்படுத்த இயற்கை முறையில் கிடைக்கும் பூச்சிக்கொல்லிகளைப் பயன்படுத்த வேண்டும். அதனால் விசாயிகளின் நண்பன் என்று கூறப்படும் ‘மண்புழு’க்களும் அழியாமல் பாதுகாக்கப்பட்டு பயன்படுத்த வேண்டும்.

விளைநிலத்தில் மாடு களைக்கொண்டு உழவு செய்வதனால் அந்த நேரம் மாடுகளின் மூத்திரம் மற்றும் சாணம் மண்ணிற்கு ஆதார உரமாக மாறுகிறது. மேலும் வளப்படுத்த மாடுகளின் மூத்திரம் மற்றும் சாணம் இவைகளைக்கொண்டு உயிர்சக்தி மிகுந்த ஜீவாமிர்தம் ,கோமியம் ,பஞ்சகவ்யம் என்ற பொருட்கள் செலவு இல்லாமலேயே இலவசமாக கால்நடைகளால் அளிக்கப்படுகிறது.

நடப்படும் நாற்று , விதைக்கப்படும் விதைகள் பாதுகாப்பாக சேதம் இல்லாமல் முளைக்க வேப்பங்கொட்டை கரைசல், மீன் பாகு முட்டை முதலியவைகள் மண்ணில் தெளிக்கப்படுகிறது. மேற்படி கலவையுடன் மண்ணை பிசைந்து விதைகளை புரட்டி எடுத்து விதைப்பதால் விதைகள் நன்கு முளைக்கும் திறன் பெறுகிறது.

பதினைந்து நாட்களுக்கு ஒரு முறை ஜீவாமிர்தம் தெளிக்கவேண்டும். முறைப்படி உரம் போட்டு பயிர் செய்தால் அறுவடை அமோகமாக கிடைக்கும் . நம்நாட்டில் விவசாயம் செய்வோரின் எண்ணிக்கை சுமார் ஐம்பது சதவீதமாகும். ஏட்டுப்படிப்பு இல்லாமல் அனுபவப்படிப்பு மூலம் திட்டமிட்டு எந்த காலத்தில் எதைப் பயிர் செய்ய வேண்டும். எந்த நிலத்தில் பயிர் செய்யவேண்டும்? எத்தனை அளவு பயிர் செய்யவேண்டும் என்று திட்டமிட்டு விளைபொருளின் தேவைகளை அறிந்து பயிர் செய்ததால் நிச்சயம் லாபம் கிட்டியது.

மக்களின் தேவைக்கு ஏற்ப உற்பத்தி செய்ய திட்டமிட வேண்டும் உற்பத்தியும் தேவையும் சமமாக இருந்தால் சேதாரம் குறையும். விளைச்சலும் கட்டுப்பாடுடன் செய்ய முடியும் இயற்கை விவசாயத்தின் மூலம் பெறப்படும் பொருட்களின் உயிர்சத்து அதிகமாக இருக்கும். பொருட்களின் எடையும் குறைவாக

இருக்கும் . விலையும் கூடுதலாக கிடைக்க வாய்ப்பு உண்டு.

உதாரணமாக இயற்கை விவசாயம் மூலம் உற்பத்தி செய்யப்படும் காய்கள் ஒரு கிலோவிற்கு அறுபது கிடைத்தால் அதே நேரம் நவீன முறையில் உற்பத்தி செய்யப்படும் காய்கள் ஒரு கிலோவிற்கு முப்பது தான் கிடைக்கும்.

நவீன முறை விவசாயம் செய்ய செலவு அதிகமாகும். விளைபொருளின் விலை குறைவாக இருக்கும். இதனால தான் நஷ்டம் ஏற்பட்டு விசாயிகள் பாதிக்கப்படுகிறார்கள் .

படித்தவர் இயற்கை விசாயம் செய்ய முன்வந்தால் திட்டமிட்டு பயிர்கள் தேர்வு செய்து இயற்கை உரங்களை பயன்படுத்தி குறைந்த செலவில் விவசாயம் செய்து அதிக மகசூலும் பெற்று பொருட்களை கூடுதல் விலைக்கு விற்பனை செய்து கடன் பெராமல் ஒரு ரூபாய் செலவு செய்து மூன்று ரூபாய்க்கு விற்பனை செய்து இரண்டு ரூபாய் வரை லாபம் பெற முடியும்.

இந்த இயற்கை விவசாய நடைமுறைகளை கடைப்பிடிப்போம் வளம் பெறுவோம்.

  • கோவிந்தராம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *