ஆர் முத்துக்குமார்
ஐக்கிய நாடுகள் சபையின் உச்சிமாநாடு இந்த வாரம் இயற்கையைப் பாதுகாப்பதற்கான ஒரு முக்கிய உலகளாவிய ஒப்பந்தத்திற்கு ஒப்புதல் தந்து விட்டது.
கடந்த நான்கு ஆண்டுகளாக சீனா மற்றும் கனடாவும் இணைந்து எடுத்த முடிவு தற்போது மாண்ட்ரீலில் நடந்த உயிரியல் பன்முகத்தன்மைக்கான ஐ.நா. மாநாட்டில் 2030–ம் ஆண்டுக்குள் இயற்கை பாதுகாப்பு முயற்சிகளை வழிநடத்துவதற்கான ஒப்பந்தத்தை பெற்றுத் தந்து இருக்கிறது.
(COP 15) பல்லுயிர் பாதுகாப்புக்காக புதிய மற்றும் அர்ப்பணிப்புள்ள வழிமுறையை உருவாக்க வேண்டும் என இந்தியாவின் சுற்றுச்சூழல் அமைச்சர் பூபேந்திர யாதவ் வலியுறுத்தியுள்ளார். மேலும் அதற்கான நிதியை உருவாக்குவதற்கான அவசரத் தேவையையும் விளக்கியுள்ளார்.
பொது மற்றும் தனியார் துறைகளில் இருந்து பல்லுயிர் பெருக்க முன்முயற்சிகளுக்காக ஆண்டுக்கு 200 பில்லியன் டாலர்களை ஒதுக்குமாறு நாடுகளுக்கு இந்த ஒப்பந்தம் வழிகாட்டுகிறது.
வளர்ந்த நாடுகள் 2025–ம் ஆண்டு தொடங்கி 25 பில்லியன் டாலர்கள் மற்றும் 2030–ம் ஆண்டிற்குள் ஆண்டுக்கு 30 பில்லியன் டாலர்கள் நிதியுதவி அளிக்கும்.
மொத்தம் 23 இலக்குகளைக் கொண்ட இந்த ஒப்பந்தம், 2020–க்குள் பாதுகாப்பை வழிநடத்தும் நோக்கத்துடன் இருந்த 2010 (ஐச்சி) பல்லுயிர் இலக்குகளை மாற்றியமைக்கிறது. அந்த இலக்குகள் எதுவும் அடையப்படவில்லை. மேலும் எந்த ஒரு நாடும் 20 (ஐச்சி) இலக்குகளை அடையவில்லை.
ஐச்சியைப் போலல்லாமல், இந்த ஒப்பந்தம் அதிக அளவிடக்கூடிய இலக்குகளைக் கொண்டுள்ளது. அதாவது தொழில்துறைக்கு வழங்கப்படும் தீங்கு விளைவிக்கும் மானியங்களை ஆண்டுக்கு டாலர் $500 பில்லியன் குறைப்பது போன்றது – இது முன்னேற்றத்தைக் கண்டறிந்து புகார் அளிப்பதை எளிதாக்குகிறது.
விஞ்ஞானிகள் ஆறாவது அழிவு நிகழ்வு, extinction என்று அழைக்கப்படும் இந்த நூற்றாண்டின் இறுதியில் 1 மில்லியனுக்கும் அதிகமான இனங்கள் மறைந்துவிடும். உலகின் 40% நிலம் சீரழிந்துள்ளது. மேலும் வனவிலங்குகளின் எண்ணிக்கை 1970 முதல் வியத்தகு அளவில் சுருங்கிவிட்டது.
இந்த நூற்றாண்டின் முதல் 22 ஆண்டுகளை தாண்டிவிட்டோம்! அழிந்த உயிரினங்கள் கூறும் பாடம் தெரிந்தும் அதைப் பற்றி கவலையின்றியா இருப்பது?
இனியும் தாமதிக்காமல் ஐ.நா. பல்லுயிர் மாநாட்டில் எடுக்கபட்டுள்ள ஒப்பந்தத்தை வரவேற்று, வளரும் நாடுகளுக்கு நிதி ஆதாரங்களை வழங்க புதிய வழிமுறையை உருவாக்க வேண்டும். அதற்கான நிதியையும் விரைவில் உருவாக்க வேண்டும்.