செய்திகள்

இம்ரான் யோசனையை மீறிய பாகிஸ்தான் அணி கேப்டன்

புதுடெல்லி, ஜூன்.17–

பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானின் யோசனைக்கு மாறாக டாஸ் வென்று பீல்டிங்கை பாகிஸ்தான் கிரிக்கெட் கேப்டன் சப்ராஸ் தேர்வு செய்ததால் அந்த அணி படுதோல்வியை சந்திக்க நேர்ந்தது. சப்ரராசின் முடிவு குறித்து இங்கிலாந்து கிரிக்கெட் வீரர் மைக்கேல் வாகன் கடுமையாக விமர்சித்துள்ளார்.

இம்ரான் கான் தனது ட்விட்டர் பக்கத்தில், இந்தியாவுக்கு எதிரான போட்டியில் பாகிஸ்தான் அணி சிறப்பான பேட்ஸ்மேன்கள், பவுலர்களுடன் போட்டிக்கு செல்ல வேண்டும். மைதானம் ஈரப்பதமாக இல்லாமல் இருந்து சப்ராஸ் டாசை வென்றால், நிச்சயம் பேட்டிங்கை தேர்வு செய்ய வேண்டும் என்று பதிவிட்டிருந்தார்.

ஆனால் இம்ரான் கானின் ஆலோசனைக்கு மாறாக டாஸ் வென்று ஆடுகளத்தின் தன்மை அறியாமல் சப்ராஸ் அகமத் பீல்டிங்கை தேர்வு செய்தார்.

இதுகுறித்து இங்கிலாந்து கிரிக்கெட் வீரரும், வர்ணனையாளருமான மைக்கேல் வாகன் தனது ட்விட்டர் பக்கத்தில், ‘உங்கள் கேப்டன் ட்விட்டரில் இல்லை இம்ரான் கான்’ என்று கிண்டலாக பதிவிட்டிருந்தார். மேலும் நெட்டிசன்கள் பலரும் சப்ராசின் தவறான முடிவை விமர்ச்சித்திருந்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *