செய்திகள்

இம்ரான் கான் தொடர்ந்திருந்தால் பாகிஸ்தான் நாடே இருந்திருக்காது

முன்னாள் ராணுவ தளபதி குற்றச்சாட்டு

இஸ்லாமாபாத், பிப். 11–

பாகிஸ்தான் பிரதமராக இம்ரான் கான் தொடர்ந்திருந்தால் நாடே இருந்திருக்காது என அந்நாட்டின் முன்னாள் ராணுவ தளபதி தெரிவித்துள்ளார்.

பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் கேப்டனாக இருந்து ஓய்வு பெற்ற இம்ரான் கான் பாகிஸ்தான் தெஹ்ரீக் இ இன்சாப் (பிடிஐ) என்ற கட்சியை தொடங்கினார். 2018ஆம் ஆண்டு நடந்த தேர்தலில் 116 இடங்களில் வெற்றிபெற்று, சிறு கட்சிகளின் உதவியோடு பிரதமர் ஆனார். இந்நிலையில் அங்கு பணவீக்கம் அதிகரித்து பொருளாதார நெருக்கடி ஏற்பட்டது.

இதனைத்தொடர்ந்து, பாகிஸ்தான் நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள் சார்பில் நம்பிக்கையில்லா தீர்மானம் தாக்கல் செய்யப்பட்டது. அதில் இம்ரான் கானுக்கு போதிய ஆதரவு இல்லாத நிலையில் அவரது ஆட்சி கடந்த ஆண்டு கலைக்கப்பட்டது. தனது தலைமையிலான அரசு கவிழ்க்கப்பட்டதற்கு வெளிநாட்டு சதி இருப்பதாக இம்ரான் கான் கூறி வருகிறார்.

இதற்கிடையே ஆளும் அரசுக்கு எதிராக பல்வேறு போராட்டங்களை முன்னாள் பிரதமர் இம்ரான் கான் நடத்தி வருகிறார். கடந்த சில மாதங்களுக்கு முன்பு, பேரணி ஒன்றில் கலந்து கொண்ட இம்ரான் கான் மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டது. இதில், அவரது வலது காலில் குண்டு பாய்ந்தது. இதனால் இம்ரான் கான் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார்.

நாடே இருந்திருக்காது

இதையடுத்து இம்ரான் கான் கூறும்போது, பாகிஸ்தான் முன்னாள் ஜனாதிபதி ஆசிப் அலி சர்தாரி, தனது ஊழலால் சேமித்த பணத்தை கூலிப்படை மற்றும் தீவிரவாதிகளுக்கு கொடுத்து, என்னை கொல்ல முயற்சி செய்கிறார். எனக்கு ஏதாவது நடந்தால் அதற்கு அவர் தான் பொறுப்பு என்று கூறினார்.

இந்த நிலையில், முன்னாள் ராணுவ தளபதி கமர் ஜாவேத் பாஜ்வா கூறும்போது, அரசாங்கத்தை காப்பாற்றாதது இம்ரான் கான் செய்த தவறு. எனது சொந்த நலனுக்காக செயல்பட்டிருந்தால், கானுக்கு தொடர்ந்து ஆதரவளித்து, கண்ணியத்துடன் ஓய்வு பெற்றிருப்பேன். மாறாக, நாட்டின் நலனுக்காக தனது சொந்த நற்பெயரைத் தியாகம் செய்வதைத் தேர்ந்தெடுத்தேன். இம்ரான் கான் பிரதமராக தொடர்ந்திருந்தால், பாகிஸ்தான் எனும் நாடே இப்போது இருந்திருக்காது’’ என அவர் தெரிவித்தார்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *