வர்த்தகம்

இன்றுமுதல் இரண்டு வழித்தடங்களில் அலெக்ரியா ஆம்னி பஸ் சேவைகள்

த.மா.கா தலைவர் ஜி.கே.வாசன் தொடங்கி வைத்து வாழ்த்து

சென்னை, செப். 5–

அலெக்ரியா ஹாலிடேஸ் & டிரான்ஸ்போர்ட் சார்பில் புதிதாக தொடங்கப்பட்ட இரண்டு ஆம்னி பஸ் சேவைகளை, தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் எம்.பி. தொடங்கி வைத்து வாழ்த்தினார்.

அலெக்ரியா ஹாலிடேஸ் நிறுவனம் கடந்த 10 ஆண்டுகளாக ஹோட்டல் மற்றும் ரிசார்ட் போன்ற தொழில்களை செய்து வருகிறது. கடந்த ஆண்டு புதிதாக அலெக்ரியா சிட்பண்ட் என்ற நிறுவனத்தை தொடங்கி வெற்றிகரமாக இயக்கி வருகிறது. இந்நிலையில் அந்த நிறுவனம் சார்பில், புதிதாக அலெக்ரியா ஹாலிடேஸ் அண்ட் டிரான்ஸ்போர்ட் என்ற ஆம்னி பஸ் சேவையை தொடங்கும் நிகழ்ச்சி, கோடம்பாக்கம் ஸ்டேட் பாங்க் எதிரில் உள்ள அலுவலக வளாகத்தில் இன்று நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சிக்கு வந்திருந்தவர்களை, அலெக்ரியா ஹாலிடேஸ் & டிரான்ஸ்போர்ட் நிறுவனத்தின் நிறுவனரும் தலைமை செயல் அலுவலருமான ‘லயன்’ நைனார் ராவுத்தர் வரவேற்றார். நிகழ்ச்சியில், தமிழ்மாநில காங்கிரஸ் பொதுச் செயலாளர் முனவர் பாஷா தலைமை வகித்து பேசினார். மனிதநேய ஜனநாயக சட்சி பொருளாளர் ஆரூன் ரஷீத், லயன்ஸ் கிளப் 324 எம் மாவட்ட கவர்னர் மாணிக்கம் உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர்.

ஜி.கே.வாசன் வாழ்த்து

நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட, தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் எம்.பி., சென்னை–இளையான்குடி மற்றும் சென்னை–கீழக்கரை ஆகிய இரண்டு வழித்தடங்களிலான, அலெக்ரியா ஆம்னி பஸ் சேவையை, தொடங்கி வைத்து வாழ்த்தினார்.

அவர் பேசும்போது கூறியதாவது:–

அலெக்ரியா ஹாலிடேஸ் & டிரான்ஸ்போர்ட்ஸ் நிறுவனர் நைனார் ராவுத்தர் விடா முயற்சி கொண்டவர். அதனால்தான் அடுத்தடுத்த பல்வேறு நிறுவனங்களை தொடங்கி தொடர்ந்து வெற்றி பெற்று வருகிறார். அவருடைய அனைத்து நிறுவனங்களையும் என்னை அழைத்தே தொடங்கினார். அவருடைய எளிமையும் எடுத்த செயலை வெற்றிகரமாக முடிக்கும் அவருடைய விடா முயற்சியும் தான், அவர் தொடங்கும் அனைத்து நிறுவனங்களின் தொடக்க விழாவிலும் நான் கலந்துகொள்ள காரணமாக இருந்து வருகிறது.

இந்த நிகழ்ச்சியில், பல்வேறு கட்சியினர் மட்டுமல்லாது திரைப்படத் துறையைச் சேர்ந்தவர்கள், வளரும் மற்றும் வளர்ந்த தொழில் முனைவோர் பலர் கலந்து கொண்டு வாழ்த்தி உள்ளனர். ஆனால், எந்த உதவியையும் இன்றுவரை நைனார் ராவுத்தர் என்னிடம் கேட்டவரில்லை. அப்படியான பண்பு நலன்களை பெற்றவராக உள்ளார். இந்த கொரோனா காலகட்டத்தில் அவருடைய அடிகளை கவனமாக எடுத்துவைத்து வெற்றி பெற வேண்டும் என்று, அனைவரின் சார்பாக வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன் என்றார்.

நிகழ்ச்சியில், திரைப்படத் துறையைச் சேர்ந்த ஜாகுவார் தங்கம், கானா உலகநாதன், வையாபுரி, உள்ளிட்டவர்களுடன் தொழில் அதிபர்கள், பல்வேறு அரசியல் கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டு வாழ்த்தினர். அலெக்ரியா ஹாலிடேஸ் & டிராவல்ஸ் நிறுவனர் நைனார் ராவுத்தர் நன்றி தெரிவித்து பேசினார்.

2 வழித்தடங்களில் சேவை

அதனைத் தொடர்ந்து, செய்தியாளர்களிடம் பேசிய அலெக்ரியா ஹாலிடேஸ் & டிராவல்ஸ் நிறுவனர் நைனார் ராவுத்தர், இன்று இரண்டு வழித்தடங்களில் ஆம்னி பஸ் சேவையை ஜி.கே.வாசன் தொடங்கி வைத்துள்ளார். சென்னை முதல் கீழக்கரை வரை மற்றும் சென்னை முதல் இளையாங்குடி ஆகிய வழித்தடங்களில் ஆம்னி பஸ் சேவை இன்று தொடங்கப்பட்டுள்ளது. இதன் வெற்றியைத் தொடர்ந்து தமிழ்நாடு முழுவதும் சேவைகளை தொடங்க உள்ளோம். புக்கிங் செய்ய, 1800–102–7466 என்ற டோல் பிரி எண்ணிலும் சென்னை அலுவலத்திற்கு 8939857602 என்ற எண்ணிலும், இளைான்குடி அலுவலகத்திற்கு 8939857607 எண்ணிலும் தொடர்பு கொள்ளலாம்.

மேலும் அலெக்ரியா பார்மசீயூடிகல்ஸ், அலெக்ரியா எல்பிஜி கேஸ் போன்ற நிறுவனங்களை துவங்குவதற்கு உண்டான ஆயத்தப் பணிகளையும் மேற்கொண்டுள்ளோம் என தெரிவித்தார். அவருடன் அலெக்ரியா நிறுவனத்தின் முதன்மை செயல்பாட்டு அலுவலர் எம்.பரசுராம், டைரக்டர் கே. லாவண்யா ஆகியோர் உடன் இருந்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *