போஸ்டர் செய்தி

இந்த ஆண்டின் குறைந்த விலையாக பெட்ரோல் இன்று ரூ.71.41க்கு விற்பனை

சென்னை, டிச. 31–

பெட்ரோல் இந்த ஆண்டிலேயே மிகவும் குறைவான விலையாக ரூ.71.41 காசுக்கு இன்று விற்கப்பட்டது.

சர்வதேச சந்தையில் கச்சா எண்ணை விலைக்கு ஏற்ப பெட்ரோல், டீசல் விலையை எண்ணை நிறுவனங்கள் நிர்ணயம் செய்கின்றன. தினசரி அடிப்படையில் இந்த விலை நிர்ணயம் செய்யப்படுகிறது. இந்த ஆண்டு தொடக்கத்தில் இருந்து பெட்ரோல், டீசல் விலையில் ஏற்ற, இறக்கம் நிலவியது.

ஆகஸ்ட் 16ம் தேதி முதல் இவற்றின் விலை இறங்காமல் தொடர்ந்து உயரத் தொடங்கியது. இந்த விலை உயர்வு கடந்த அக்டோபர் 4ம் தேதி உச்சத்தை எட்டியது. அன்று லிட்டர் ஒன்றுக்கு பெட்ரோல் ரூ.91.34-க்கும், டீசல் ரூ.80.10-க்கும் விற்பனை ஆனது.

இந்த நிலையில் சர்வதேச சந்தையில் பெட்ரோல், டீசல் விலை குறையத் தொடங்கியதால், உள்நாட்டிலும் படிப்படியாக விலை குறைந்து வருகிறது.

இந்நிலையில், இன்று பெட்ரோல் விலை லிட்டருக்கு 21 பைசா குறைக்கப்பட்டதன் மூலம், ஆண்டின் கடைசி நாளான இன்று ஆண்டிலேயே மிகக் குறைந்த விலைக்கு விற்கப்படுகிறது. டீசல் விலை 24 பைசா குறைக்கப்பட்டது.

சென்னையில் இன்று பெட்ரோல் விலை நேற்றைய விலையை விட லிட்டர் ஒன்றுக்கு 21 காசுகள் குறைந்து ரூ.71.41க்கும், டீசல் விலை 24 காசுகள் குறைந்து ரூ.66.35க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *