போஸ்டர் செய்தி

இந்தோனேஷியா சுனாமி: பலி 281 ஆக அதிகரிப்பு

ஜகர்த்தா,டிச.24–

இந்தோனேஷியாவில் எரிமலை வெடித்ததால் உருவான சுனாமி பேரலையில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 281 ஆக அதிகரித்துள்ளது.

இந்தோனேஷியாவின் ஜாவா, சுமத்ரா தீவுகளுக்கு இடையே அமைந்துள்ள கிரகதோ எரிமலை வெடித்து சிதறியது. இதனைத் தொடர்ந்து கடலோர பகுதிகளை சுனாமி தாக்கியது. 10 அடி உயரத்திற்கும் அதிகமாக சீறி பாய்ந்த அலைகள் குடியிருப்புகளுக்குள் புகுந்தது.

இதில் பலியானவர்களின் எண்ணிக்கை தற்போது 281 ஆக அதிகரித்துள்ளது. 843 படுகாயம் அடைந்துள்ளதாகவும், 28 பேர் மாயமாகி உள்ளதாகவும் அந்நாட்டு அரசு தகவல் தெரிவித்துள்ளது. தொடர்ந்து மீட்புப் பணிகள் நடந்து வருவதால், பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக்கூடும் என அஞ்சப்படுகிறது. இந்த சுனாமி தாக்குதலில் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் யாரும் பலியாகவோ, காயமடையவோ இல்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *