வர்த்தகம்

இந்துஸ்தான் பல்கலை இணை வேந்தர் ஆனந்த் ஜேக்கப் வர்கீஸ் சர்வதேச சேவை ஒய்ஸ்மென் நிறுவன தென்னிந்திய உறுப்பினராக தேர்வு

சென்னை, பிப். 26–

‘சர்வதேச ஒய்ஸ்மென்’ என்ற சமூக சேவை நிறுவனத்தின், தென்னிந்திய மன்ற உறுப்பினர் பதவிக்கு, இந்துஸ்தான் பல்கலை இணை வேந்தர் ஆனந்த் ஜேக்கப் வர்கீஸ் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

ஐ.நா.சபை, ஒய்.எம்.சி.ஏ., மலேரியா ஒழிப்பு நிதியம் உள்ளிட்ட அமைப்புகளோடு, சமூக சேவையாற்றும் அமைப்பு, சர்வதேச ஒய்ஸ்மென். இது, 1992ல் ஒஹியோ மாகாணத்தில் போலிடோ நகரத்தில் நிறுவப்பட்டது. இதன் தலைமையகங்கள் உலக நாடுகளில் உள்ளன.

இந்தியாவில் உள்ள ஒய்ஸ்மென் அமைப்புகளுக்கிடையே நடந்த தலைவர் தேர்தலில், இந்துஸ்தான் பல்கலை இணைவேந்தரும், அதன் குழும நிர்வாக இயக்குனர் ஆனந்த் ஜேக்கப் வர்கீஸ் தேர்ந்தெடுக்கப்பட்டார். இவர், 2024 வரை பதவி வகிப்பார்.

இவர், ஏற்கனவே, தென்னிந்திய மண்டலத்தின் மயிலாப்பூர் ஒய்ஸ்மென் அமைப்பில் உறுப்பினராகவும், தென்னிந்திய மண்டல இயக்குனராக, 2016 முதல் 2018 வரை பணியாற்றி, நாட்டின் சிறந்த மண்டல இயக்குனருக்கான விருதைப் பெற்றார். இவரது பெற்றோர் கே.சி.ஜி.வர்கீஸ் – எலிசபெத் வர்கீஸ் மற்றும் மனைவி ஆனி ஜேக்கப் ஆகியோரும், ஒய்ஸ்மென் அமைப்பில், பல்வேறு பொறுப்புகளை வகித்து, சமூகப் பணியாற்றியவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *