செய்திகள்

இந்திய ஒற்றுமை நடைப்பயணத்தில் ராகுலுடன் இணையும் பிரியங்கா காந்தி

டெல்லி, நவ. 20–

கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரையில் நடைபெறும் இந்திய ஒற்றுமை நடைப்பயணத்தில் ராகுல் காந்தியுடன் அவரது சகோதரி பிரியங்கா காந்தியும் 3 நாட்கள் இணைந்து பயணம் செய்ய உள்ளார்.

செப்டம்பர் 7-ம் தேதி தமிழ்நாட்டின் தென்பகுதியில் உள்ள கன்னியாகுமரியில், காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி இந்திய ஒருமைப்பாட்டு நடைப்பயணத்தை தொடங்கினார். கடந்த 7ம் தேதி முதல் மராட்டியத்தில் நடைப்பயணம் சென்று கொண்டு உள்ளது. மகாராஷ்டிரா மாநிலம் புல்தானா மாவட்டத்தில் உள்ள செகாவ் கஜனன் தாதா பாட்டீலின் சந்தை முற்றத்தில் இருந்து நேற்று தொடங்கிய ராகுல் காந்தியின் நடைப்பயணம், இரவு ஜல்கான் மாவட்டத்தை அடைந்தது.

3 நாள் பங்கேற்கும் பிரியங்கா

பெண்ட்வால் மாவட்டத்தைச் சேர்ந்த கட்சித் தலைவர்கள் மற்றும் தொண்டர்களுடன் ராகுல் காந்தி தனது நடைப்பயணத்தை தொடங்கி இன்றுடன் 74 வது நாள் ஆகிறது. இன்று மகாராஷ்டிராவில் நிறைவடையும் அவரது நடைப்பயணம் இரவில் மத்திய பிரதேச மாநிலம் சென்று பின்னர் அங்கு பயணிக்கவுள்ளது.

இந்நிலையில், ராகுல்காந்தியின் சகோதரியும் காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளர்களில் ஒருவருமான பிரியங்கா காந்தி, மத்திய பிரதேச நடைப்பயணத்தில் பங்கேற்க உள்ளார். நவம்பர் 23 முதல் 25 வரை நடைபெறும் இந்திய ஒருமைப்பாட்டு நடைப்பயணத்தில் பங்கேற்க உள்ளதாக காங்கிரஸ் கட்சி வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *