செய்திகள்

இந்தியாவில் புதிதாக 7,554 பேருக்கு கொரோனா

புதுடெல்லி, மார்ச்.2–

இந்தியாவில் புதிதாக 7,554 பேருக்கு கொரோனா தொற்று பாதிப்பு உறுதியானது.

இந்தியாவில் கொரோனா 3-வது அலை தொடர்ந்து சரிந்து வந்த நிலையில் இன்று சற்று கொரோனா பாதிப்பு உயர்ந்துள்ளது. நேற்று முன்தினம் தினசரி கொரோனா பாதிப்பு 8 ஆயிரத்து 13 இருந்தது. நேற்று இந்த எண்ணிக்கை மேலும் 6,915 ஆக குறைந்த நிலையில் இன்று சற்று அதிகரித்தது.

இதுதொடர்பாக மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 7 ஆயிரத்து 554 பேருக்கு தொற்று பாதிப்பு உறுதியாகி உள்ளது. இதன்மூலம் மொத்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 4 கோடியே 29 லட்சத்து 38 ஆயிரத்து 599 ஆக அதிகரித்துள்ளது.

தொற்று பாதிப்புகளுக்கு ஒரே நாளில் 223 பேர் உயிரிழந்துள்ளனர். இதன்மூலம் உயிரிழந்தோர் மொத்த எண்ணிக்கை 5 லட்சத்து 14 ஆயிரத்து 23 ஆக உயர்ந்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா பாதிப்பில் இருந்து 14 ஆயிரதபுது 123 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர். இதனால் குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 4 கோடியே 23 லட்சத்து 38 ஆயிரதபுது 673 ஆக உயர்ந்துள்ளது.

கொரோனா தொற்றுக்கு தற்போது 85 ஆயிரத்து 680 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்தியாவில் இதுவரை 177 கோடியே 79 லட்சத்து 92 ஆயிரத்து 977 டோஸ் கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 8 லட்சத்து 55 ஆயிரத்து 862 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது

என்று மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இதனிடையே இந்தியாவில் கொரோனா பாதிப்பை கண்டறிய நேற்று ஒரே நாளில் 7 லட்சத்து 84 ஆயிரத்து 59 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளதாகவும், இதுவரை மொத்தம் 76 கோடியே 91 லட்சத்து 67 ஆயிரத்து 52 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளதாகவும் ஐ.சி.எம்.ஆர்.தெரிவித்துள்ளது.

உலகம் முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 43 கோடியே 83 லட்சத்து 96 ஆயிரத்து 328 ஆகும். கொரோனா பாதிப்பில் இருந்து இதுவரை 37 கோடியே 8 லட்சத்து 63 ஆயிரத்து 437 பேர் குணமடைந்துள்ளனர். மேலும் வைரஸ் தாக்குதலுக்கு இதுவரை 59 லட்சத்து 83 ஆயிரத்து 133 பேர் உயிரிழந்துள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published.