செய்திகள்

இந்தியாவில் புதிதாக 12,899 பேருக்கு கொரோனா

புதுடெல்லி, ஜூன் 19–

இந்தியாவில் புதிதாக 12,899 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனா தொற்றுக்கு தற்போது 72,474 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்தியா முழுவதும் பல மாநிலங்களில் மீண்டும் கொரோனா தொற்று அதிகரித்து வருகிறது. நேற்று முன்தினம் 12 ஆயிரத்து 847 பேருக்கு தொற்று ஏற்பட்டது. நேற்று 13 ஆயிரத்து 216 பேருக்கு தொற்று ஏற்பட்டது. இந்நிலையில் இன்று புதிதாக 12,899 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதுகுறித்து மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:–

நாட்டில் இதுவரை 4 கோடியே 32 லட்சத்து 96 ஆயிரத்து 692 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அதேபோல், தொற்று பாதிப்புகளுக்கு ஒரே நாளில் 15 பேர் உயிரிழந்துள்ளனர். இதன்மூலம் உயிரிழந்தோர் மொத்த எண்ணிக்கை 5 லட்சத்து 24 ஆயிரத்து 855 ஆக உயர்ந்துள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா பாதிப்பில் இருந்து 8,518 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர். இதனால் குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 4 கோடியே 26 லட்சத்து 99 ஆயிரத்து 363 ஆக உயர்ந்துள்ளது. கொரோனா தொற்றுக்கு தற்போது 72,474 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதுவரை 196 கோடியே 14 லட்சத்து 88 ஆயிரத்து 807 பேருக்குகொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 13 லட்சத்து 24 ஆயிரத்து 591 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.

இந்தியாவில் கொரோனா பாதிப்பை கண்டறிய நேற்று ஒரே நாளில் 4 லட்சத்து 46 ஆயிரத்து 387 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. இதுவரை மொத்தம் 85 கோடியே 78 லட்சத்து 41 ஆயிரத்து 663 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published.