செய்திகள்

இந்தியாவில் நேற்றைய பாதிப்பை விட 7.4% உயர்ந்த இன்றைய பாதிப்பு

புதுடெல்லி, ஜூலை 18–

இந்தியாவில் நேற்றைய பாதிப்பை விட இன்று 7.4% உயர்ந்து, 41 ஆயிரத்து 157 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

கொரோனா 2வது அலையில் நாட்டில் பாதிப்புகள் திடீர் உச்சம் அடைந்தது. இதனை தொடர்ந்து, கொரோனா தடுப்பூசி செலுத்தி கொள்ளும் எண்ணிக்கை உயர தொடங்கிய நிலையில், இந்தியாவில் கொரோனா பாதிப்புகள் தற்போது மெல்ல மெல்ல கட்டுக்குள் வரத் தொடங்கியுள்ளது.

இந்த நிலையில் இந்தியாவில் நேற்றை கொரோனா பாதிப்பை விட இன்று 7.4 சதவீதம் உயர்ந்துள்ளது.

இதுதொடர்பாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், நாட்டில் கடந்த 24 மணிநேரத்தில் 41 ஆயிரத்து 157 பேர் கொரோனா பாதிப்புக்கு ஆளாகி உள்ளனர். இதுவரை 3 கோடியே 11 லட்சத்து 6 ஆயிரத்து 65 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.

கடந்த 24 மணிநேரத்தில் 42,004 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதுவரை குணமடைந்தோர் எண்ணிக்கை 3 கோடியே 2 லட்சத்து 69 ஆயிரத்து 796 ஆக உயர்ந்துள்ளது. இதன்மூலம் குணமடைவோர் விகிதம் 97.31 சதவீதமாக உள்ளது.

கொரோனா பாதிப்பால் ஒரேநாளில் மேலும் 518 பேர் உயிரிழந்தனர். இதனால் மொத்த உயிரிழப்பு எண்ணிக்கை 4 லட்சத்து 13 ஆயிரத்து 609 ஆக உயர்ந்து உள்ளது. இதன்மூலம் உயிரிழப்பு விகிதம் 1.33 சதவீதமாக உள்ளது.நாடு முழுவதும் கொரோனா பாதிப்பு காரணமாக தற்போது வரை 4 லட்சத்து 22 ஆயிரத்து 660 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். நாட்டில் இதுவரை போடப்பட்ட கொரோனா தடுப்பூசிகளின் எண்ணிக்கை 40 கோடியே 49 லட்சத்து 31 ஆயிரத்து 715 ஆக அதிகரித்துள்ளது.

உலகம்

உலகம் முழுவதும் தற்போது 19 கோடியே 7 லட்சத்து 50 ஆயிரத்து 331 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனா பாதிப்பில் இருந்து இதுவரை 17 கோடியே 38 லட்சத்து 12 ஆயிரத்து 784 பேர் குணமடைந்துள்ளனர். மேலும் வைரஸ் தாக்குதலுக்கு இதுவரை 40 லட்சத்து 98 ஆயிரத்து 543 பேர் உயிரிழந்துள்ளனர்.

கொரோனா தொற்றுக்கு தற்போது 1 கோடியே 28 லட்சத்து 39 ஆயிரம் பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். சிகிச்சை பெறுபவர்களில் 80 ஆயிரத்து 646 பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *