செய்திகள்

இந்தியாவில் தொடர்ந்து 3வது நாளாக குறைந்த தினசரி கொரோனா பாதிப்பு

புதுடெல்லி, ஆக. 15-

இந்தியாவில் தொடர்ந்து 3வது நாளாக தினசரி கொரோனா பாதிப்பு குறைந்து, இன்று புதிதாக 36 ஆயிரத்து 83 பேருக்கு தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

இந்தியாவில் கொரோனா தொற்றின் 2-வது அலை ஓய்ந்து வந்த நிலையில், இந்த மாத தொடக்கத்தில் இருந்து தினசரி பாதிப்பு சற்று அதிகரித்தே காணப்பட்டது. இந்நிலையில் இந்தியாவில் தினசரி கொரோனா பாதிப்பு தொடர்ந்து 3-வது நாளாக இன்றும் சரிந்துள்ளது.

மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ள தகவலின் அடிப்படையில், இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 36 ஆயிரத்து 083 பேருக்கு தொற்று பாதிப்பு உறுதியாகி உள்ளது. இதன்மூலம் மொத்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 3 கோடியே 21 லட்சத்து 92 ஆயிரத்து 576 ஆக அதிகரித்துள்ளது.

அதேபோல், தொற்று பாதிப்புகளுக்கு ஒரே நாளில் 493 பேர் உயிரிழந்துள்ளனர். இதன்மூலம் உயிரிழந்தோர் மொத்த எண்ணிக்கை 4 லட்சத்து 31 ஆயிரத்து 225 ஆக உயர்ந்துள்ளது. உயிரிழந்தோர் விகிதம் 1.34% ஆக உள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா பாதிப்பில் இருந்து 37,927 பேர் குணமடந்து வீடு திரும்பியுள்ளனர். இதனால், குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 3 கோடியே 13 லட்சத்து 76 ஆயிரத்து 15 ஆக உள்ளது . இதன்மூலம் குணமடைவோர் விகிதம் 97.45 ஆக உயர்ந்துள்ளது.

மேலும் கொரோனா தொற்றுக்கு தற்போது 3 லட்சத்து 85 ஆயிரத்து 336 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். சிகிச்சை பெறுவோர் விகிதம் 1.21% ஆக குறைந்துள்ளது.

இந்தியாவில் இதுவரை 54 கோடியே 38 லட்சத்து 46 ஆயிரத்து 290 பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது. நேற்று மட்டும் 73 லட்சத்து 50 ஆயிரத்து 553 பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *