டெல்லி, மார்ச் 10–
இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சைப் பெறுவோரின் எண்ணிக்கை 3,294 ஆக அதிகரித்துள்ளதாக இந்திய மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக இந்திய மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத்துறை சார்பில் கூறியிருப்பதாவது:–
இந்தியாவில் கடந்த 4 வாரத்துக்கும் மேலாக கொரோனா பாதிப்பு தொடர்ந்து சிறுக சிறுக அதிகரித்து வருகிறது. அந்த வகையில் நேற்று முன்தினம் 326 ஆகவும் நேற்றைய தினம் 379 பேராகவும் இருந்த கொரோனா பாதிப்பு கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 440 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.
மொத்த எண்ணிக்கை 3,294
கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சைப் பெறுவோரின் மொத்த எண்ணிக்கை 3,294 ஆக உள்ளது. புதிதாக 3 பேர் உயிரிழந்த நிலையில், கொரோனாவால் பாதிக்கப்பட்டு மொத்தமாக 5,30,779 பேர் உயிரிழந்துள்ளனர். கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளவர்களின் மொத்த எண்ணிக்கை 4,46,89,512 ஆக உள்ளது.
தேசிய அளவில் கொரோனாவிலிருந்து குணமடைவோரின் எண்ணிக்கை 98.80 சதவிகிதமாக உள்ளது. இறப்பு சதவிகிதம் 1.19 சதவிகிதமாக இருக்கிறது. நேற்று 7,230பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்ட நிலையில் இதுவரை 220 கோடியே 64 லட்சத்து 41,230 டோஸ் கொரோனா தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.