செய்திகள்

ஆற்றுக்கால் பகவதி கோவிலில் 27–ந் தேதி ‘‘கின்னஸ் சாதனை மகளிர் பொங்கல் விழா’’

தலைவர் பி.அனில்குமார், செயலாளர் சிசுபாலன் நாயர் தகவல்

திருவனந்தபுரம், பிப்.21

உலகம் முழுவதும் நடைபெறும் திருவிழாக்களில், அதிக அளவில் பெண்கள் பங்கேற்று ஒரே நேரத்தில் லட்சம் மகளிர் பொங்கல் வைத்து ஆற்றுக்கால் பகவதி அம்மனை வழிபடுவது கின்னஸ் சாதனையில் இடம் பெற்றுள்ளது.

இந்த ஆண்டு பொங்கல் பெருவிழா 19 ந் தேதி துவங்கியது. 28 ந் தேதி வரை நடைபெறுகிறது. மொத்தமாக மகளிர் பொங்கல் வைக்கும் திருவிழா 27 ந் தேதி நடைபெறுகிறது என்று ஆற்றுக்கால் பகவதி கோவில் அறக்கட்டளை தலைவர் பி.அனில்குமார் செயலாளர் சிசுபாலன் நாயர் தெரிவித்தார்.

திருவனந்தபுரம் ஆற்றுக்கால் பகவதி கோவிலில் அறக்கட்டளையின் தலைவராக பி.அனில்குமார், செயலாளர் சிசுபாலன் நாயர் பதவி வகிக்கின்றனர். www.attukal.org என்ற எங்களது இணையதளத்தில் பொங்கல் மற்றும் பூஜைக்கு பக்தர்கள் பதிவு செய்யலாம். கோவில் கவுண்டரில் டெபிட்/ கிரெடிட் கார்டுகள் மூலம் பூஜை கட்டணம் மற்றும் காணிக்கையை பக்தர்கள் செலுத்தலாம். திருமணம் மற்றும் இதர விசேஷங்களுக்கு அனைத்து வசதிகளுடன் கூடிய ‘தேவி’ ‘கார்திகா’, ‘அம்பா 3’ ஆகிய அரங்குகள் கோவில் அருகில் உள்ளது.

கோவிலுக்கு வருகை தரும் பக்தர்கள் தங்குவதற்காக அறைகள் மற்றும் தங்கும் இட வசதி செய்யப்பட்டுள்ளது. ஒவ்வொரு மாதமும் பவுர்ணமி அன்று பெண்கள் மட்டுமே பங்கேற்கும் ‘ஐஸ்வர்ய பூஜை நடைபெறுகிறது. ஒவ்வொரு மலையாள மாதத்தின் முதல் தேதி, செவ்வாய், வெள்ளி மற்றும் ஞாயிற்றுக்கிழமையில் அன்னதானம் (இலவச உணவு) பக்தர்கள் மற்றும் பொது மக்களுக்கு வழங்கப்படுகிறது.

ஏழைகளுக்கு

மருத்துவ ஆன்மீக இதழ்

ஆற்றுக்கால் பிரசாதம் என்னும் ஆன்மீக இதழை பெற மாதத்திற்கு ரூ.15 ஆண்டு சந்தா ரூ.150 செலுத்தி கோவில் அறக்கட்டளையில் இருந்து பெற்றுக் கொள்ளலாம். அரவனா, அபிஷேகம், தேவி உருவம் பொறித்த படம் ஆகியவை இந்தியாவில் எங்கிருந்து வேண்டுமானாலும் ரூ.150 அனுப்பி விரைவு தபால் மூலம் பக்தர்கள் பெற்றுக் கொள்ளலாம்.

49 இருக்கைகள் கொண்ட குளிர்சாதனம் மற்றும் குளிர்சாதனம் இல்லாத பேருந்துகள், 27 இருக்கைகள் குளிர்சாதன வசதிகள் கொண்ட வேன்கள், 43 இருக்கைகள் கொண்ட பாரத் பென்ஸ் குளிர்சாதன வசதிகள் கொண்ட சொகுசு பேருந்துகள் கல்யாணம் மற்றும் சுற்றுலா செல்ல வாடகைக்கு கிடைக்கும். வறுமையில் உள்ள இளைஞர், இளம் பெண்களுக்கு திருமணம், பொருளாதார ரீதியாக பின் தங்கியுள்ள மாணவர்களுக்கு உதவித் தொகை, ஏழை, எளிய மக்களுக்கு மருத்துவ உதவி ஆகியவை ஆண்டுதோறும் அறக்கட்டளையால் செய்யப்படுகிறது.

தொழிற் பயிற்சி மையம் : ஆற்றுக்கால் அம்பா மந்திரம், ஆற்றுக்கால் தேவி அம்மா, மற்றும் ஆற்றுக்கால் அபயாம்பிகா போன்ற தெய்வீக பாடல்கள் அடங்கிய சிடிக்கள் பக்தர்களுக்கு கோவில் கவுண்டர்களில் கிடைக்கும்.

மேலும் விவரங்களுக்கு முகவரி: தலைவர் பி.அனில்குமார், செயலாளர் சிசுபாலன் நாயர் தொடர்பு கொள்ளவும்.

செயலாளர், ஆற்றுக்கால் பகவதி கோவில் அறக்கட்டளை. மணக்காடு அஞ்சல், தபால் பெட்டி எண்.5805. திருவனந்தபுரம் 695 009.

தொலைபேசி : 0471 2463130, 2456456, 2455600, 2455700,

www.attukal.org, e mail: attukal@vsnl.com வலைதளத்தைப் பார்க்கலாம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *