செய்திகள்

ஆந்திரா, தெலுங்கானாவில் 100 ரூபாயை தொட்டது பெட்ரோல் விலை

புதுடெல்லி, ஜூன் 4–

ஆந்திரா, தெலுங்கானாவின் பல மாவட்டங்களில் இன்று பெட்ரோல் விலை 100 ரூபாயை எட்டிவிட்டது.

கடந்த மே 4ம் தேதி முதல் ஜூன் 4ம் தேதி வரை பெட்ரோல், டீசல் விலை 18 முறை உயர்த்தப்பட்டுள்ளது. இன்று பெட்ரோல் விலை 27 காசும், டீசல் விலை 28 காசும் உயர்த்தப்பட்டுள்ளது. இதனால் டெல்லியில் பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.94.76 ஆகவும், டீசல் ரூ.85.66 ஆகவும் உள்ளது. மாநில அரசுகள் விதிக்கும் வாட் மற்றும் போக்குவரத்துச் செலவு ஆகியவற்றின் அடிப்படையில் பெட்ரோல், டீசல் விலை மாநிலங்களுக்கு மாநிலம் மாறுபடுகிறது.

அதிகபட்சமாக ராஜஸ்தான் மாநிலத்தில் வாட் வரி உள்ளதால் அங்கு பெட்ரோல் விலை ஏற்கனவே 100 ரூபாயைக் கடந்துவிட்டது. அடுத்ததாக மத்திய பிரதேசம், மகாராஷ்டிரம் ஆகிய மாநிலங்கள் அதிக வரி விதிக்கின்றன. அங்கும் பெட்ரோல் விலை 100 ரூபாயைக் கடந்துள்ளது.

இந்நிலையில், தற்போது ஆந்திரா, தெலுங்கானா மாநிலங்களின் பல பகுதிகளில் 1 லிட்டர் பெட்ரோல் விலை 100 ரூபாயை எட்டி உள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *