செய்திகள்

ஆத்திபாடி ஊராட்சியில் புதிய பால் உற்பத்தியாளர் கூட்டுறவு சங்க கிளை: அக்ரி எஸ்.எஸ். கிருஷ்ணமூர்த்தி திறந்து வைத்தார்

திருவண்ணாமலை, மே 23–

ஆத்திபாடி ஊராட்சியில் புதிதாக பால் உற்பத்தியாளர் கூட்டுறவு சங்கத்தினை மாவட்ட ஆவின் தலைவர் அக்ரி எஸ்.எஸ்.கிருஷ்ணமூர்த்தி திறந்து வைத்தார்.

திருவண்ணாமலை மாவட்டம் தண்டராம்பட்டு ஒன்றியம் ஆத்திப்பாடி ஊராட்சியில் உள்ள பால் உற்பத்தியாளர்களின் நீண்ட நாள் கோரிக்கையை நிறைவேற்றும் வகையில் தமிழக முதல்வரின் ஆணைக்கிணங்க புதியதாக கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் சங்கம் கிளை திறப்பு விழா நடந்தது. விழாவிற்கு மாவட்ட பால் வளத்துறை துணை பதிவாளர் ராமச்சந்திரன் தலைமை தாங்கினார். மாவட்ட ஆவின் துணை பொது மேலாளர் நாச்சியப்பன் முன்னிலை வகித்தார் சங்க தலைவர் கோவிந்தராஜ் வரவேற்றார்.

நிகழ்ச்சியில் முன்னாள் அமைச்சரும், மாவட்ட ஆவின் கூட்டுறவு சங்க தலைவருமான அக்ரி.எஸ்.எஸ்.கிருஷ்ணமூர்த்தி பங்கேற்று புதிய கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் சங்கத்தை குத்துவிளக்கேற்றி திறந்து வைத்தார். இதனைத் தொடர்ந்து பால் உற்பத்தியாளர்களிடம் பால் சேகரித்த பின் பால் உற்பத்தியாளர்களுக்கும், பொதுமக்களுக்கும், , இனிப்பு, மற்றும் முககவசம் வழங்கினார்.

அப்போது அவர் கூறுகையில், மலைவாழ் மக்கள் வசிக்கும் பகுதியான ஆத்திப்பாடியில் பால் உற்பத்தியாளர் சங்கம் துவக்கப்படுவது இப்பகுதி மக்களின் நீண்டநாள் கோரிக்கை வைத்து வந்தனர். முதலமைச்சர் ஆணையின் பேரில் புதிய கூட்டுறவு பால் உற்பத்தியாளர் சங்கம் துவங்கப்படுகிறது. இச்சங்கம் மூலம் மலைவாழ் மக்கள் தங்கள் கறவை மாட்டின் பால்களை ஊற்றி பயனடையலாம் என்று கூறினார்.

நிகழ்ச்சியில் மாவட்ட இலக்கிய அணி செயலாளர் நாராயணன், மாவட்ட பொருளாளர் நைனாகண்ணு, ஆவின் மேலாளர் காளியப்பன் , முன்னாள் ஒன்றியக்குழு தலைவர் டி.ஜானகிராமன், தண்டராம்பட்டு ஒன்றிய துணை செயலாளர் குமாரிபலன் முன்னாள் நகர மன்ற உறுப்பினர் பர்குணகுமார், ஒன்றிய குழு உறுப்பினர் ஏழுமலை, டாஸ்மாக் மாவட்ட செயலாளார் தனபால், புதுப்பாளையம் ஒன்றிய நிர்வாகி பழனிராஜ், பால் கூட்டுறவு சங்க மேலாளார் காளியப்பன் மற்றும் பரணி, உட்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் சங்க செயலாளர் ஏழுமலை நன்றி கூறினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *