வாழ்வியல்

ஆதார் அட்டை தகவல்கள்; உச்ச நீதிமன்ற மாற்றங்கள்!

இந்தியாவில் நேற்று பிறந்த குழந்தைகளுக்கும் நாட்களை எண்ணும் முதியவர்களுக்கும் ‘ஆதார் அட்டை’ அவசியம் என்றாகி விட்டது. ‘எங்கும் ஆதார், எதற்கும் ஆதார்’. ஆதார் இல்லையேல் எதுவுமில்லை’ இந்நிலை, கடந்த ஆண்ட செப்டம்பர் மாத உச்சநீதிமன்ற தீர்ப்பால் மாறியுள்ளது.

தீர்ப்பின் முக்கிய அம்சங்கள்:–

1) ஆதார் அட்டை வழங்கும் திட்டத்திற்கு அரசியல் சட்ட அங்கீகாரம் உண்டு.

இவ்வாறு தீர்ப்பளித்த உச்சநீதிமன்றம், இத்திட்டத்திற்காக பயோ மெட்ரிக் என்னும் கண் விழிப்படலம், விரல் ரேகை போன்ற விவரங்களை கொடுக்க ஒப்புக் கொள்வதால், ஒருவருடைய தனித்தன்மை பாதுகாப்பான உரிமை மீறப்படுவதில்லை என்று கூறியது.

2) தனியார் நிறுவனங்களுக்குத் தடை: –

(KYC) ‘உங்கள் வாடிக்கையாளரைத் தெரிந்து கொள்ளுங்கள்’ திட்டத்தை, அங்கீகாரம் பண்ண ஒருவரது ஆதார் அட்டையை பயன்படுத்த தடை விதித்தது.

3) ஆதார் தேவை: பான், வருமானவரிக் கணக்கு தாக்கலுக்கு, ஆதார் கட்டாயம் தேவை என்று கூறியது.

4) வங்கிக் கணக்குக்கு ஆதார் தேவையில்லை: –

பல வங்கிகள், பேடிஎம்(Paytm) போன்ற நிறுவனங்கள், ஆதார் எண் கேட்பதும், கொடுக்காவிடில் கணக்கு முடக்கப்படும் என்று கூறுவதும் வாடிக்கை. அதற்கு ஆதார் கேட்கக் கூடாது. அலைபேசி சிம்கார்டு பெற வாக்காளர் அட்டை, ஓட்டுநர் உரிமம் கொடுக்கலாம். ஆதார் தேவையில்லை.

5) நீட் தேர்வு : –

நீட் தேர்வு சிபிஎஸ்சி, யுஜிசி தேர்வுக்கு ஆதார் எண் தேவையில்லை.

6) நலத்திட்டம், மானியம் பெற ஆதார் தேவை

அரசின் நலத்திட்ட உதவிகள், மானியங்கள், சலுகைகள் பெற ஆதார் கொடுக்க வேண்டியது கட்டாயம்.

7) குழந்தைகளுக்கு விதிவிலக்கு:–

எந்த ஒரு குழந்தைக்கும் ஆதார் எண் பெறவில்லை என, எந்த திட்ட பயனும் மறுக்கப்படக் கூடாது.

8) பிரிவு 57 ரத்து:–

எந்த தனியார் நிறுவனமும் யாரிடமும் ஆதார் எண் கேட்கக் கூடாது. கேட்கலாம் என்ற பிரிவு 57 (Section 57) ரத்து செய்யப்படுகிறது.

9) தேசிய பாதுகாப்பு விதிவிலக்கு ரத்து:–

ஆதார் சட்டத்திலிருந்த ‘தேசிய பாதுகாப்பு விதிவிலக்கை’ ரத்து செய்தது. இதன் மூலம் அரசு தனிநபர் ஆதார் விபரங்களை அணுகுவதை கட்டுப்படுத்துவதன் மூலம், தனி நபரின் ஆதார் ரகசிய பாதுகாப்பு உறுதி செய்யப்படும்.

ஆதார் திட்டத்தையும் கட்டமைப்பு விஷயங்களையும் ஆராயும்போது அதில் உள்ள குறைந்தபட்ச தனிநபரின் விபரங்களை அவ்வளவு எளிதில் கூற முடியாது எனத் தீமானித்துள்ளது.

ஆதார் உச்சநீதிமன்ற தீர்ப்பு பயன்கள் பற்றி அறிய…

www.uidai.gov.in, www.servicesindia.gov.in/aathar, www.cleartax.in/incometax, www.policybazzar.com/aathar.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *