போஸ்டர் செய்தி

ஆக்ரா–லக்னோ விரைவுச்சாலையில் லாரி மீது பேருந்து மோதி 7 பேர் பலி

புதுடெல்லி,ஏப்.21–
மெயின்புரி அருகே ஆக்ரா–லக்னோ விரைவுச்சாலையில் லாரி மீது பேருந்து மோதியதில் 7 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
உத்தர பிரதேசத்தின் மெயின்புரி அருகே ஆக்ரா–லக்னோ விரைவு சாலையில் பேருந்து ஒன்று பயணிகளை ஏற்றிக் கொண்டு சென்றது. கண்ணிமைக்கும் நேரத்திற்குள் பேருந்து லாரி மீது பயங்கரமாக மோதியது. இந்த சம்பவத்தில் 7 பேர் பலியானார்கள். 34 பேர் காயமடைந்தனர். இதுபற்றிய தகவல் அறிந்ததும் போலீசார் அங்கு சென்று காயமடைந்தவர்களை மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்து உள்ளனர். விபத்து குறித்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *