செய்திகள்

ஆக்சிஜன் கருவியில் கோளாறு: ஆந்திராவில் 2 கொரோனா நோயாளிகள் பலி

ஐதராபாத், ஏப்.26–

ஆந்திராவில் ஆக்சிஜன் சப்ளை பாதிப்பால் இன்று அதிகாலை 2 கொரோனா நோயாளிகள் உயிரிழந்தனர்.

ஆந்திர மாநிலம் விஜய நகரத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட 3 ஆயிரத்து 832 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதில் அரசு மருத்துவமனையில் ஏராளமான நோயாளிகள் சிகிச்சையில் உள்ளனர். அவர்களில் 12 பேருக்கு மூச்சுத்திணறல் அதிகமாக இருந்ததால் உயர் அழுத்த ஆக்சிஜன் செலுத்தப்பட்டது.

அப்போது இதற்கான கருவியில் கோளாறு ஏற்பட்டதால் ஆக்சிஜன் சீராக செல்லவில்லை. இதனால் இன்று அதிகாலை 2 நோயாளிகள் உயிரிழந்தனர். அந்த மருத்துவமனையில் சிகிச்சை பெறும் கொரோனா நோயாளிகளில் 97 பேருக்கு ஆக்சிஜன் வழங்கப்பட்டு வருகிறது. இந்த கோளாறு எப்படி ஏற்பட்டது என்பது குறித்து விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *