சினிமா

‘ஆக்க்ஷன் – த்ரில்லர் – ஸ்பை’ ஹாலிவுட் படத்தில் ‘கொலைகாரியாக’ கமல் மகள் ஸ்ருதி ஹாசன்!

லாஸ்ஏஞ்சல்ஸ், ஜூன். 19–

‘ட்ரெட்ஸ்டோன்’ என்னும் பெயரில் உருவாகும் அமெரிக்க ‘த்ரில்லர்’ படத்தில் நடிக்க கமல்ஹாசனின் மகள் ஸ்ருதி ஹாசன் ஒப்பந்தமாகி உள்ளார்.

ஸ்ருதிஹாசனுக்கு வயது 33. தமிழ் – தெலுங்கு – இந்தி ஆகிய படங்களில் நடித்திருப்பவர். நல்ல பாடகியும் கூட. சிங்கம்–3 (2017) படத்தில் சூர்யாவோடு ஜோடியாக நடித்திருந்தார். அவர் இப்போது ஹாலிவுட்டில் உருவாகும் ‘ட்ரெட்ஸ்டோன்’ படத்தில் நடிக்க ஒப்பந்தமாகி உள்ளார்.

அமெரிக்காவில் ஆக்க்ஷன் – ஸ்பை (ஒற்றன்) படங்களில் சங்கிலித் தொடராக வெளிவந்த ஜேசன் போர்ன் படங்களை தொடர்ந்து இப்படம் உருவாகிறது. ஜெர்மி இர்வைன், பிரியான் ஜே.ஸ்மித் ஜெப்ரி வைனர், டேன் ப்ரெட்கின், ப்ராட்லீ தாமஸ், ஜஸ்டின் லெவி ஆகிய ஹாலிவுட் நடிகர்களும் நடிக்கிறார்கள்.

டெல்லியில் வசிக்கும் நீரா படேல் என்னும் கதாபாத்திரத்தில் ஸ்ருதிஹாசன் நடிக்கிறார். இவர் ஓட்டலில் பணிபுரியும் சர்வர் வேடத்தில் தோன்றும் அதே நேரம் – பயிற்சி பெற்ற ‘கொலைக்காரி’ வேடத்திலும் தோன்றுகிறார். ஒரே வேடம் தான் என்றாலும் மாறுபட்ட இரட்டை கதாபாத்திரம்.

போர்னே ஜடென்டி (2002), போர்னே சுப்ரமசி (2004), போர்னே அல்ட்டிமேட்ட, போர்னே லெகசி (2012), ஜேசன் போர்னே (2016)… இப்படி வெளி வந்த ஹாலிவுட் படத்தின் தொடர்ச்சியாக இப்போது ‘ட்ரெட் ஸ்டோன்’ தயாராகி வருகிறது.

ஆக்க்ஷன் – ஸ்பை (ஒற்றன்) த்ரில்லர் படமாகும் இது. புட்டா பெஸ்டில் படப்பிடிப்போடு துவங்கி உள்ளது.

இளமைக்கு இளமை – கவர்ச்சிக்கு கவர்ச்சி – துடிதுடிப்புக்கு துடிதுடிப்பு மூன்றும் இயல்பாகவே காணப்படும் ஸ்ருதி ஹாசன், இந்த த்ரில்லர் – ஆக்க்ஷன் – ஒற்றன் படத்தில் ஏற்பது வித்யாசமான கதாபாத்திரம் என்பதால், அதிக ஆர்வம் காட்டி வருகிறார். சிரத்தையோடு நடித்து பேர் எடுக்க வேண்டும், பாராட்டப்பட வேண்டும் என்ற முனைப்பில் இருக்கிறார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *