செய்திகள்

ஆகஸ்ட் 10–ந் தேதி முதல் உடற்பயிற்சி கூடங்கள் திறப்பு: எடப்பாடி பழனிசாமி உத்தரவு

சென்னை, ஆக.6–

வரும் 10–ந் தேதி (திங்கட்கிழமை) முதல் தமிழ்நாட்டில் உடற்பயிற்சி கூடங்களை திறக்க முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியிடம், தமிழ்நாடு உடற்பயிற்சியக உரிமையாளர்கள் மற்றும் பயிற்சியாளர்கள் நல சங்கத்தின் சார்பில் அதன் நிர்வாகிகள், தமிழ்நாட்டில் உள்ள உடற்பயிற்சியகங்களை திறக்க வேண்டும் என கோரிக்கை வைத்தனர். அக்கோரிக்கையினை கனிவுடன் பரிசீலித்த முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள ஓர் ஆணையில் கூறியிருப்பதாவது:–-

மத்திய அரசு தனியார் உடற்பயிற்சிக் கூடங்களை திறக்க ஆகஸ்ட் 5–ந் தேதி முதல் அனுமதி அளித்துள்ள நிலையில், தமிழ்நாட்டிலுள்ள தனியார் உடற்பயிற்சிக் கூடங்கள் (stand alone only), 50 வயது மற்றும் அதற்குக் குறைவான வயதுடைய வாடிக்கையாளர்களுடன் 10.8.2020 முதல் இயங்க அனுமதிக்கப்படுகிறது. மேலும், இதற்கான நிலையான வழிகாட்டு செயல் முறைகள் தனியாக வெளியிடப்படும். அவற்றை கட்டாயம் கடைபிடிக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்ளப்படுகிறது.

இவ்வாறு எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *