முழு தகவல்

அலெக்சாண்டரின் வம்ச வழியினர் வாழும் பழைமை நிறைந்த அழகிய மலானா நல்லா


டாக்டர் ரவி சதுர்வேதி


கடந்த காலம் என்பது துன்பம் தரக்கூடியதாக இருக்கலாம். ஆனால் அதனை தவிர்த்து விட்டு நகரலாம் அல்லது அதிலிருந்து கற்றுக்கொள்ளலாம் என்பதுதான் விதி. மத்திய கிழக்கு ஆசியாவிலிருந்து வந்த ஆரியர்கள் தொடங்கி, இந்தியா மீது பல்வேறு படையெடுப்புகள் நடந்துள்ளன. அலெக்சாண்டர் தி கிரேட் என்று அழைக்கப்பட்ட மாவீரன் அலெக்சாண்டர் கி.மு. 326 ஆவது ஆண்டில் அலெக்சாண்டர் இந்தியா மீது படையெடுத்து வந்தான். அவனைத் தொடர்ந்து காசிம், துருக்கியர்கள், மங்கோலியர்கள், கில்ஜிக்கள், சூரிஸ், மொகலாயர்கள் என கடைசியாக படையெடுத்து வந்தர்கள் ஆங்கிலேயர்கள். இதுபோன்ற படையெடுப்புகளின் போது, இங்கிருந்த செல்வங்கள் கொள்ளையடிக்கப்பட்டது, மக்கள் அழித்தொழிக்கப்பட்டனர், அது தவிர, படையெடுப்பாளர்களுக்கு ஏற்ப பலர் தங்கள் வாழ்வியலை மாற்றிக்கொண்டனர்.

விட்டுச் சென்றவை என்ன?

பல ஆண்டுகள் ஆட்சி செய்த பிறகு அவர்கள் பல்வேறு மரபு சார்ந்த விசயங்களை இங்கேயே விட்டுச்சென்றுள்ளனர் என்பதை மறுக்க முடியாது. அதில் குறிப்பிட்டுச் சொல்ல வேண்டும் என்றால், கிரிக்கெட், தேவாலயங்கள், ஆங்கில மொழி ஆகியவற்றை வெள்ளையர்கள் விட்டுச் சென்றுள்ளனர். அதேபோல், மொகலாயர்கள் பள்ளி வாசல்களையும் குரான் மற்றும் பிரியாணியை இங்கு விட்டுச்சென்றுள்ளதை காண முடியும்.

அதுபோல், பேரரசன் அலெக்சாண்டர் திரும்பி செல்கையில், களைப்படைந்த மற்றும் காயமடைந்த வீரர்களை இங்கேயே விட்டுச் சென்று விட்டான் என்று வரலாறு கூறுகிறது. அப்படியான அந்த படைவீரர்கள் இமாச்சல பிரதேசத்தின் மலானா என்ற பழைமையான ஊரில் தங்கி விட்டனர். அங்கு சென்ற ஒரு சுற்றுலா பயணி அந்த ஊரைப்பற்றி கூறும்போது, மலானா மீது படிந்திருக்கும் போதைப் பொருள்களின் புகையை விலக்கிப் பார்த்தீர்களானால், மிகப் பழைமையான கதை புதையல்களும் பதிலளிக்கப்படாத கேள்விகளும் சூழ்ச்சிகளும் நிறைந்திருப்பதை பார்க்க முடியும் என்று அழகாக விவரிக்கிறார்.

மலானா நல்லா

மலானா, இமாச்சல் பிரதேச மாநிலத்தின் மிகப் பழைமையான ஊர். மற்ற நகரங்களோடு தொடர்பற்று அமைந்திருக்கும் மலானா நல்லா, வட கிழக்கு பதியியில் அமைந்துள்ள குலு பள்ளத்தாக்குக்கும் பார்வதி பள்ளத்தாக்கு பகுதிக்கும் இடையில் இயற்கை எழில் கொஞ்சும் வகையில் அமைந்துள்ளது. அந்த ஊரின் பண்பாடு உலகத்தின் மற்ற பகுதிகளில் இருந்து வேறுபட்டு அங்கு படிந்துள்ளதை காணலாம்.

பிரெஞ்சு எழுத்தாளன் விக்டர் ஹியூகோ எழுதினான், ஒரு ராணுவத்தின் படையெடுப்பை ஒருவர் தடுக்கலாம்; ஆனால் கருத்து பரவலை ஒருபோதும் தடுக்க முடியாது என்று கூறினான்.

அப்படியாக, கிமு 326 இல் அலெக்சாண்டர் படையெடுத்து வந்தபோது, பஞ்சாப் பகுதியில் ஆட்சி செய்த போரஸுக்கு எதிரான போரில் அலெக்சாண்டரின் ஏராளமான வீரர்கள் காயமடைந்தனர். அவர்கள்தான் இந்த தனிமைப்படுத்தப்பட்ட பழைமையான ஊரில் தஞ்சமடைந்தனர்.

அப்படியாக தஞ்சமடைந்த அந்த வீரர்கள், தங்கள் முன்னோர்களான மலானியர்களைப் பற்றி அவ்வப்போது கூறுவதுண்டு. அதேபோல், அந்தக் காலகட்டத்தின் கலைப்பொருட்கள் அந்த கிராமத்தில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. அதாவது கோயிலுக்குள் உள்ள வாள் போன்றவை. ஆனாலும், அந்த வீரர்களின் மரபணு ஆய்வு செய்யப்பட்டு அவர்கள் அலெக்சாண்டர் வம்சாவழியினர் என்று நிறுவப்படவில்லை.

புதிரான தோற்றம், மொழி

ஆனால் அவர்களுடைய உடல் தோற்றம் மற்றும் மொழி உள்ளிட்ட அம்சங்கள் அங்குள்ள உள்ளூர் பழங்குடியினர் போல் அல்லாமல் புதிரானதாக உள்ளது. அதுதான் மலானியர்களை பற்றிய புதிர்களாக உள்ளது. மேலும் அவர்கள் கானாஷி என்ற மொழியை பேசுகிறார்கள். அது புனிதமானதாக அவர்களால் போற்றப்படுகிறது. இந்த மொழி, வேறு யாருக்கும் அவர்களால் கற்பிக்கப்படுவதில்லை என்பதுடன் உலகில் வேறு எங்கும் அந்த மொழி பேசப்படவில்லை. ஆனாலும், அவர்கள் ஒரு புதிய மனிதரை அழைக்கும் போது ‘பாய் ஜி’ என்றே அழைக்கிறார்கள். அதில் உள்ளூர் சாயல் உள்ளதை மறுக்க முடியாது.

மலானியர்கள் பேசும் கானாஷி மொழி, ஸ்வீடன் உப்சாலா பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த அஞ்சு சக்சேனாவின் கவனத்தை ஈர்த்துள்ளது. அவர் கூறும்போது, கானாஷி மொழி, எழுதப்படாத மொழியாக உள்ளதால், அழியக்கூடிய நிலையில் உள்ளது என்று வருத்தத்துடன் கூறுகிறார்.

மேலும் இந்த மொழி சீன-திபெத்திய மொழிக் குடும்பத்தைச் சேர்ந்தது என்றும் சுற்றியுள்ள அனைத்து கிராமங்களிலும் பேசப்படும் இந்தோ-ஆரிய மொழிகள் கனாஷிக்கு முற்றிலும் தொடர்பில்லாதவை என்றும் கூறுகிறார். இது வரலாற்றுக்கு முந்தைய மற்றும் அதன் மொழியியல் கட்டமைப்பு பற்றிய சுவாரஸ்யமான கேள்விகளை எழுப்புகிறது என்றும் கூறுகிறார்.

மாலன் வாசிகளின் வெளிர் பழுப்பு முடி, வெளிர் பழுப்பு கண்கள், நீண்ட மூக்குகள் மற்றும் ஒரு தனித்துவமான மாநிறம் அல்லது தோலின் தங்க பழுப்பு நிறம் போன்ற தனித்துவமான பண்புகளை கொண்டுள்ளன. அவர்கள் பாரம்பரியமாக வெளிர் பழுப்பு அங்கிகள், தொப்பிகள் மற்றும் சணல் காலணிகளையே அணிந்துள்ளனர். தோற்றத்தில், அவர்கள் ஹிமாச்சல் மாநில மக்களை விட மத்தியதரைக்கடல் பகுதியில் வாழும் மக்களையே ஒத்துள்ளனர்.

போதைப் பொருளாதாரம்

துரதிர்ஷ்டவசமாக, இந்த மாலன் கிராம பொருளாதாரத்தின் முதுகெலும்பாக ஹாஷிஷ் என்ற போதைப்பொருளே இருந்து வருகிறது. இதன் விளைவாக, போதைப்பொருள் வர்த்தகத்தில் குழந்தைகளும் ஈடுபடுத்தப்படுகின்றனர். இது சமூக-பண்பாட்டு பிரச்சினைகளை ஏற்படுத்தியுள்ளது. மலானியர்கள் வெளியாட்களுடன் தொடர்பை விரும்புவதில்லை.

சுற்றுலாப் பயணிகளிடமும் ஒரு இடைவெளியை பராமரிக்கிறார்கள். திருமணங்கள் அந்த கிராமத்திற்குள்ளேயே நடத்திக் கொள்கிறார்கள். இந்த விதிமுறையை மீறினால், சமூக புறக்கணிப்பாக கருதப்பட்டு, அவர்கள் சமூகத்தில் இருந்து விலக்கி வைக்கப்படுகிறார்கள். பொதுவாக ஹிமாச்சலர்கள் தங்கள் அனுபவங்களையும் உணவையும் மற்றவர்களோடு பகிர்ந்து கொள்ள விரும்புகிறார்கள்; ஆனால் மலானிகள் அப்படி ஒருபோதும் விரும்புவதில்லை.

மலானியர்களை பற்றி ஒரு சுற்றுலா பயணி கூறும்போது, ஒரு பயணியாக நான் இங்கிருந்து வெளியில் சென்ற பின்பும், இந்த மர்மமான இமாலய பகுதியின் குக்கிராமம், நான் அதை விரும்பினாலும் விரும்பாவிட்டாலும், என் மனதில் என்றென்றும் தங்கி இருக்கும். நான் அவர்களின் கலாச்சாரத்தை போற்றுவேன். மலானாவின் தனித்துவமான பண்பாட்டைப் போற்றுவதுடன், புதிரான இந்த மக்களின் மாறுபட்ட பழக்க வழக்கங்களும், குளிர்ந்த நிலத்தின் தன்மையும் என்னை எப்போதும் பரவசப்படுத்தும் என்று கூறுகிறார்.


தமிழில்: மா. இளஞ்செழியன்


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *