செய்திகள்

அரசு ஐ.டி.ஐ.க்களில் சேர 15–ந் தேதி வரை கால அவகாசம் நீட்டிப்பு

சென்னை, ஜூன்.12–

அரசினர் தொழிற்பயிற்சி நிலையம் (மகளிர்) கிண்டியில் உள்ள பொறியியல் மற்றும் பொறியியல் அல்லாத தொழிற்பிரிவுகளில் ( ஐ.டி.ஐ) பயிற்சியில் சேர கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து சென்னை மாவட்ட கலெக்டர் சண்முக சுந்தரம் வெளியிட்டுள்ள செய்தியில்,

‘இங்கு ஆகஸ்ட் மாதம் தொடங்கவுள்ள தொழிற்பிரிவுகளில் சேர்ந்து பயிற்சி பெற 10–ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மேலும் இத்தொழிற்பயிற்சி நிலையத்தில் சேர விரும்பும் தகுதியுள்ள மாணவிகள் வரும் 15–ம் தேதிக்குள் www.skilltraining.tn.gov.in என்கிற இணையதள முகவரியின் மூலம் விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. விண்ணப்பிக்க வேண்டிய இணையதளம் முகவரி: www.skilltraining.tn.gov.in’ என்று தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *