செய்திகள்

அரசு அலுவலர்களுக்கு கிருமிநாசினி, முககவசம் வினியோகம்

Spread the love

கொடைக்கானல் செஞ்சிலுவை சங்கம் சார்பில்

அரசு அலுவலர்களுக்கு கிருமிநாசினி, முககவசம் வினியோகம்

கொடைக்கானல், ஏப்.02–

கொடைக்கானல் செஞ்சிலுவை சங்கம் சார்பில் தலைவர் குரியன் ஆப்ரகாம் வழிகாட்டுதலின் பேரில் அரசு துறை அலுவலர்களுக்கு கிருமி நாசினி, முக கவசம் வழங்கப்பட்டது.

திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானல் கொரோனா வைரசு காரணமாக நாடு முழுவதும் 144 தடை உத்தரவு போடப்பட்டுள்ளது. இந்நிலையில் கொடைக்கானலில் பல்வேறு அரசு துறை அலுவலகம் தற்போது செயல்பட்டு வருகிறது. அப்பணியாளர்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் கொடைக்கானல் கிளை இந்திய செஞ்சிலுவை சங்கத்தின் தலைவர் டாக்டர் குரியன் ஆப்ரகாம் வழிகாட்டுதலின் பேரில் செஞ்சிலுவை சங்கத்தின் செயலாளர் ஆசிரியர் மூர்த்தி இணை செயலாளர்கள் தாவுத், ஆசிரியர் சூசை ஜான் நாட்ராயன் ரீமாஸ் அப்பாஸ் ஆகியோர்கள் தலைமையில் கொடைக்கானல் கோட்டாட்சி தலைவர் அலுவலகம், அலுவலக பணியாளர்கள், வட்டாட்சியர் அலுவலகம் அலுவலக பணியாளர்கள் மாவட்ட துணை கண்காணிப்பாளர் மற்றும் காவலர்கள் போக்குவரத்து காவலர்கள் மகளிர் காவல் துறையினர் நகராட்சி ஆணையர் மற்றும் அலுவலக பணியாளர்களுக்கும், தூய்மை பணியிளர்களுக்கும் வெள்ளி நீர் வீழ்ச்சி பகுதியில் உள்ள டோல்கேடில் பாதுகாப்பு மற்றும் சுகாதார பணியினை மேற்கொண்டு வரும் பணியாளர்களுக்கு முக கவசங்களும் கிருமி நாசினி மருந்துகளும் வழங்கப்பட்டது. இந்தியா செஞ்சிலுவை சங்கத்தின் கொடைக்கானல் கிளை தலைவர் டாக்டர் குரியன் ஆப்ரகாம் தலைமையில் பல்வேறு ஆக்கபூர்வமான அரசு துறை அலுவலர்களுக்கும் பொது நிலையினருக்கும் பல்வேறு விதமான ஆக்கப்பூர்வமான பணியினை செய்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இதனை காவல் துறை வருவாய் துறை நகராட்சி து உள்ளிட்ட பல்வேறு அரசு துறையினர் சமூக பணியாளர்கள் பொதுமக்களும் நன்றி பாராட்டுகின்றனர்‌.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *