செய்திகள்

அமைச்சர் பாண்டியராஜனுடன் ஆஸ்திரேலிய துணை தூதர் சந்திப்பு

சென்னை, செப்.12–

ஆஸ்திரேலியாவின் தென்னிந்தியாவிற்கான துணை தூதர் மைக்கேல்கோஸ்டா, தமிழ் ஆட்சி மொழி, தமிழ் பண்பாடு மற்றும் தொல்லியல்துறை அமைச்சர் பாண்டியராஜனை சந்தித்து பேசினார்.

அப்போது கீழ்க்கண்ட விவரங்கள் குறித்து கலந்துரையாடினர்.

* ஆஸ்திரேலியா தேசிய காட்சிக்கூடம் தமிழகத்தில் உள்ள எழும்பூர் அருங்காட்சியகத்துடன் இணைந்து ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தம் ஏற்படுத்துதல்.

* ஆஸ்திரேலிய பழங்குடியினர் குறித்த திரைப்படவிழாவினை சென்னையில் நடத்துதல்.

* 2035–ம் ஆண்டிற்குள் இந்தியா – ஆஸ்திரேலியாவுக்கு இடையேயான பொருளாதாரத்தினை வலுப்படுத்துதல் சார்ந்த ஆய்வறிக்கை சமர்ப்பித்தல் தொடர்பான கலந்துரையாடல்.

* தமிழகம் மற்றும் ஆஸ்திரேலியாவுக்கு இடையேயான கலாச்சார பரிவர்த்தனைகளை ஏற்படுத்துதல் ஆகியவை குறித்து விரிவாக பேசப்பட்டது.

இச்சந்திப்பின் போது ஒருங்கிணைப்பாளர் கார்த்திகேயன் வைத்தீஸ்வரன் உடனிருந்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *