செய்திகள்

அமைச்சர்கள் வரிசையில் உதயநிதி ஸ்டாலினுக்கு 10-வது இடம்

சென்னை, டிச.15-

தமிழகத்தின் புதிய அமைச்சராக உதயநிதி ஸ்டாலின் பொறுப்பேற்று கொண்டார். அதைத்தொடர்ந்து அவரை அமைச்சர் பட்டியலில் அரசு சேர்த்துள்ளது. புதிய அமைச்சர் என்றாலும் 35 பேர் கொண்ட அமைச்சர் பட்டியலில் உதயநிதி ஸ்டாலினுக்கு 10-வது இடம் வழங்கப்பட்டு உள்ளது.

இதுகுறித்து தமிழக அரசு நேற்று வெளியிட்ட அமைச்சர்களின் மூப்பு பட்டியல் வரிசை வருமாறு:-–

10வது இடம்

1. முதலமைச்சர் – மு.க.ஸ்டாலின்.

2. நீர்வளத்துறை அமைச்சர் – துரைமுருகன்.

3. நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் – கே.என்.நேரு.

4. ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் – ஐ.பெரியசாமி.

5. உயர் கல்வித்துறை அமைச்சர் – க.பொன்முடி.

6. பொதுப்பணித்துறை அமைச்சர் – எ.வ.வேலு.

7. வேளாண்மை- உழவர் நலத்துறை அமைச்சர் – எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம்.

8. வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை அமைச்சர் – சாத்தூர் ராமச்சந்திரன்.

9. தொழில்துறை அமைச்சர் – தங்கம் தென்னரசு.

10. இளைஞர்நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் – உதயநிதி ஸ்டாலின்.

11. சட்டத்துறை அமைச்சர் – எஸ்.ரகுபதி.

12. வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் – சு.முத்துசாமி.

13. கூட்டுறவுத்துறை அமைச்சர் – கே.ஆர்.பெரியகருப்பன்.

14. குறு, சிறு, நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் – தா.மோ.அன்பரசன்.

15. செய்தித்துறை அமைச்சர் – மு.பெ.சாமிநாதன்.

16. சமூகநலம், மகளிர் உரிமைத்துறை அமைச்சர் – பி.கீதா ஜீவன்.

17. மீன் வளம், கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சர் – அனிதா ஆர்.ராதாகிருஷ்ணன்.

18. பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் – ஆர்.எஸ்.ராஜகண்ணப்பன்.

19. சுற்றுலாத்துறை அமைச்சர் – கா.ராமச்சந்திரன்.

20. உணவுத்துறை அமைச்சர் – அர.சக்கரபாணி.

21. மின்சாரத்துறை அமைச்சர் – செந்தில்பாலாஜி.

22. கைத்தறி மற்றும் துணிநூல்துறை அமைச்சர் – ஆர்.காந்தி.

23. மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் – மா.சுப்பிரமணியன்.

24. வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் – பி.மூர்த்தி.

25. போக்குவரத்துத் துறை அமைச்சர் – எஸ்.எஸ்.சிவசங்கர்.

26. இந்துசமயம் மற்றும் அறநிலை யங்கள் துறை அமைச்சர் – பி.கே. சேகர்பாபு.

27. நிதி மற்றும் மனிதவள மேலாண்மைத்துறை அமைச்சர் – பழனிவேல் தியாகராஜன்.

28. பால்வளத்துறை அமைச்சர் – சா.மு.நாசர்.

29. சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர் – செஞ்சி கே.எஸ்.மஸ்தான்.

30. பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் – அன்பில் மகேஷ் பொய்யாமொழி.

31. சுற்றுச்சூழல் மற்றும் மாசுக்கட்டுப்பாட்டுத்துறை அமைச்சர் – மெய்யநாதன்.

32. தொழிலாளர் நலத்துறை அமைச்சர் – சி.வி.கணேசன்.

33. தகவல் தொழில்நுட்பவியல் துறை அமைச்சர் – மனோ தங்கராஜ்.

34. வனத்துறை அமைச்சர் – மதிவேந்தன்.

35. ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் – கயல்விழி செல்வராஜ்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

3 அரசு செயலாளர்களுடன்…

அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை, சிறப்பு திட்டங்கள் செயலாக்கத்துறை, வறுமை ஒழிப்புத் திட்டங்கள் மற்றும் ஊரக கடன்கள் ஆகிய துறைகளுக்கு பொறுப்பேற்றுள்ளார். அதன்படி அவர் 3 அரசு செயலாளர்களுடன் இணைந்து பணியாற்ற உள்ளார்.

அந்த வகையில் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை கூடுதல் தலைமைச்செயலாளர் அதுல்ய மிஸ்ரா, சிறப்பு திட்டங்கள் செயலாக்கத்துறை முதன்மை செயலாளர் உதயச்சந்திரன் (முழு கூடுதல் பொறுப்பு), வறுமை ஒழிப்பு திட்டங்கள் மற்றும் ஊரக கடன்கள் முதன்மை செயலாளர் பி.அமுதா ஆகியோருடன் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் இணைந்து பணியாற்ற இருக்கிறார்.

அமைச்சர்கள் பட்டியல் வரிசையில் 10-வது இடம் பெற்றுள்ளதால், தமிழக சட்டசபையில் அமைச்சர்களுக்கான 2 வரிசைகளில் முதல் வரிசையில் உதயநிதி ஸ்டாலின் இடம்பெறுவார்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *