செய்திகள்

அமெரிக்க நர்சிங் ஹோமில் மூட்டையில் கட்டி வைக்கப்பட்ட பிணங்கள்

அமெரிக்க நர்சிங் ஹோமில் மூட்டையில் கட்டி வைக்கப்பட்ட பிணங்கள்
இறந்த 17 பேருக்கும் கொரோனா தொற்று உறுதி

நியூயார்க், ஏப். 16

அமெரிக்க நர்சிங் ஹோம் ஒன்றில் மூட்டையில் 17 பிணங்கள் கட்டி வைக்கப்பட்டு இருந்தது பெரிய பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அந்த 17 பேருக்கும் கொரோனா வைரஸ் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

அமெரிக்காவில் உள்ள எஸ்சக்ஸ் கவுண்டி பகுதியில் இருக்கும் நர்சிங் ஹோம்களில் மிகப்பெரிய நர்சிங் ஹோம் அதுதான். அண்டோவேர் பகுதியில் இருக்கும் அண்டோவேர் சப்அகுட் அன்ட் ரிஹப் சென்டர் டூ என்று அழைக்கப்படும் அந்த நர்சிங் ஹோமில் 500க்கும் அதிகமான நபர்கள் சிகிச்சை பெற்று வருகிறார்கள். அமெரிக்காவில் இருக்கும் பல்வேறு நர்சிங் ஹோம்கள் போல இங்கும் பலர் பல்வேறு நோய்களுக்காக சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

இந்த நிலையில் அந்த நர்ஸிங் ஹோமில் பிணங்கள் அடுக்கி வைக்கப்பட்டு உள்ளது. நிறைய பிணங்கள் கார் வைக்கப்படும் ஷெட்டில் வைக்கப்பட்டு உள்ளது. உடனே வந்து சோதனை செய்யுங்கள் என்று மர்ம நபர் ஒருவர் புகார் அளித்து உள்ளார்.

இதனால் உடனே அங்கு வந்த போலீசார் அந்த நர்சிங் ஹோமில் சோதனை செய்துள்ளனர்.

நர்சிங் ஹோம் முழுக்க தீவிரமாக சோதனை செய்தனர். இறுதியில் பின் பக்கம் இருக்கும் அறை ஒன்றில் பிணங்கள் அடுக்கி வைக்கப்பட்டு இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அங்கு மொத்தம் 17 பிணங்கள் இப்படி அடுக்கி வைக்கப்பட்டு இருந்தது. இந்த உடல்கள் உடனே கொரோனா சோதனைக்கு அனுப்பப்பட்டது. கடைசியில் அனைவருக்கும் இதில் கொரோனா உறுதி செய்யப்பட்டது.

76 பேர் பலி

வெறும் 4 உடல்களை மட்டும் வைக்கும் இடத்தில் 17 உடல்களை திணித்து வைத்து உள்ளனர். இந்த நர்சிங் ஹோமில் கடந்த ஒரு வாரத்தில் மட்டும் 76 பேர் பலியாகி உள்ளனர்.

இந்த நர்சிங் ஹோமிற்கு அடுத்தடுத்து இரண்டு கட்டிடங்கள் உள்ளது. இதில் இருந்து 76 பேர்தான் பலியாகி உள்ளனர். இதில் 26 பேருக்கு மொத்தமாக கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. மற்றவர்கள் எப்படி பலியனார்கள் என்றே தெரியவில்லை. இவர்களுக்கு எல்லாம் கொரோனா சோதனை செய்யாமலே உடலை புதைத்து இருக்கிறார்கள்.

அங்கு கொரோனா நோயாளிகள் இருக்கும் இடத்தில் வைத்துதான் மற்ற நோயாளிகளும் சிகிச்சை பெற்று வருகிறார்கள். இதனால் யாருக்கு எப்போது கொரோனா பரவும் என்பதையே கணிக்க முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. அங்கு பணியாற்றும் ஊழியர்களுக்கும் 41 பேருக்கு கொரோனா ஏற்பட்டுள்ளது. அங்கு அடுக்கி வைக்கப்பட்டு இருந்த 17 உடல்களில் 2 உடல்கள் அங்கு பணியாற்றிய நர்ஸ்களின் உடல்கள் ஆகும்.

இந்த நர்சிங் ஹோமின் நிறுவனர் தற்போது தலைமறைவாகி உள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *