செய்திகள்

அமெரிக்க டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 81.47ஆக வீழ்ச்சி

புதுடெல்லி, செப்.26–

அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு மேலும் வீழ்ச்சி அடைந்துள்ளது.

கொரோனாவால் வீழ்ந்த பொருளாதாரத்தை மீட்டெடுக்க பல நாடுகள் முயற்சித்து வரும் நிலையில் உக்ரைன் – ரஷ்யா இடையேயான போர் உலக பொருளாதாரத்தை மேலும் பின்னோக்கி கொண்டு சென்றிருக்கிறது. இந்நிலையில், அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு வரலாற்றில் இதுவரை இல்லாத வகையில் சரிவைக் கண்டது.

வாரத்தின் முதல் நாளான இன்று இந்திய பங்குச்சந்தை வர்த்தகத்தை தொடங்கியது முதல் டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு வீழ்ச்சியடைந்து வருகிறது.

வர்த்தகம் தொடங்கியது முதல் சந்தையில் முதலீடுகள் வெளியேற்றம், முதலீடுகளை டாலருக்கு மாற்றுதல், கச்சா எண்ணெய் விலை, உக்ரைன் – ரஷ்யா போர் உள்பட பல காரணங்கள் டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு சரிவை சந்தித்துள்ளது.

பங்குச் சந்தையில் இன்று வர்த்தகம் தொடங்கியதுமே அமெரிக்க டாலருக்கு இந்திய ரூபாயின் மதிப்பு 81.47 ஆக வீழ்ச்சியடைந்துள்ளது. தொடர்ந்து அமெரிக்க டாலரின் மதிப்பு உயர்ந்து வருவதால் இந்திய ரூபாயின் மதிப்பு வீழ்ச்சியடைந்து வருகிறது. இதனால், முதலீட்டாளர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *