செய்திகள்

அமெரிக்காவில் தமிழ் புத்தாண்டு விழா கொண்டாட்டம்

பழனி,ஏப்.15

அமெரிக்காவில் உள்ள அரசு பள்ளியில் அமெரிக்கர்கள் தமிழ் புத்தாண்டு விழாவை சிறப்பாக கொண்டாடினார்கள்.

அமெரிக்கா மத்திய புனோரிடாவில் வாழ் தமிழ்சங்கம் சார்பாக அமெரிக்க அரசு பள்ளி அரங்கத்தில் தமிழ் புத்தாண்டு விழா கலை நிகழ்ச்சிகளுடன் நடைபெற்றது. இதில் 5000 க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். தொடர்ந்து அமெரிக்க பிரஜைகளான இந்திய வம்சா வழி மாணவ, மாணவிகள் தமிழ பேச்சு போட்டிகள், தமிழ் கலாச்சார நடனங்கள் கலந்து கொண்டு தங்கள் திறமைகளை வெளிப்படுத்தி தமிழுக்கு பெருமை சேர்த்தனர். தமிழகத்தை சேர்ந்த மாணவிகள் தன்ஸ்ரீ ரியாவி உள்பட 15 பேருக்கு பல்வேறு போட்டிகளில் முதல் பரிசான தங்க காசுகள் வழங்கி விழா குழுவினர் கௌரவித்து பாராட்டு தெரிவித்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *