சினிமா

அன்று ஜோதிகாவை ‘தலை நிமிர்த்தினார்’ ராதாமோகன்; இன்று நடிப்பில் இன்னும் தரம் உயர்த்தினார் கவுதம்ராஜ்!

Spread the love

ழகான ராட்சசி

ரோக்கியமான ராட்சசி

தயத்தில் இடம் பிடிக்கும் ராட்சசி

டிணையில்லா நடிப்பில் (ஜோதிகா) ராட்சசி

ழைப்பை உணர வைத்து நிற்கும் ராட்சசி

ருக்கே ஜோதிகாவை இன்னும் உயர்த்திக் காட்டியிருக்கும் ராட்சசி

ழுந்துவரும் நேரம் வரைக்கும் ஜோதிகாவைத் தவிர வேறு எதையும் நினைவில் ஓடவிடாத ராட்சசி

று முகத்தில் ஜோதிகாவைக் காட்டியிருக்கும் ராட்சசி

யமே இல்லாமல் அடித்துச் சொல்லலாம், தமிழ் சினிமாவை தலை நிமிர வைக்க உதயமாகி இருக்கும் இன்னொரு ‘கண்ணியமான’ படைப்பாளி அறிமுக இயக்குனர் கவுதம் ராஜைக் கண்ணில் காட்டி இருக்கும் ராட்சசி.

ளிவு மறைவில்லாமல் ஆணித்தரமாக அடித்தே சொல்லலாம், குடும்பம் ரசிக்க வைக்கும் ‘ராட்சசி’.

ட வேண்டும் இது மாதிரி படங்கள் என்று ஆதங்கத்தை வெளிப்படுத்த வைத்திருக்கும் ராட்சசி.

பள்ளிக்கூடத்தின் பின்னணியில் நகரும் ஓர் திரைக்கதை என்பதால் அகர வரிசையில் இந்த விமர்சனப் பதிவு.

‘அரசு பள்ளி என்றால்.. அதில் ஓர் அலட்சியம்… கூடாது, தனியார் பள்ளிக்கு இணையாகத் தரம் உயர்த்தலாம், மாணவர்களை தலை நிமிர்த்தலாம்… எல்லாமே நம் கையில் தான் என்பதை ‘பளிச்’சென்று சொல்லியிருக்கிறார் ஜோதிகா மூலம, இயக்குனர் கவுதம்ராஜ்!

இது படம் அல்ல பாடம் என்பதை தரமான படம் வந்தால் சொல்வோமே, அதே 4 வார்த்தைகளை மீண்டும் மறு பதிவு செய்வதால்… குறை ஒன்றுமில்லை, குதூகலம் தான்.

கடமை – கண்ணியம் – கட்டுப்பாட்டை தாரக மந்திரமாக்கியிருக்கும் நாயகி ஜோதிகாவின் நடவடிக்கைகளால் கோபாவேசத்தில் சீறும் உதவி தலைமையாசிரியர் (கீதாபாரதி), உள்ளூர் எம்.எல்.ஏ., தனியார் பள்ளி நடத்தும் ஹரீஷ் பேரடி… இவர்களின் திட்டங்கள் தவிடுபொடியாக, ராட்சசியிடமே சரணாகதி தான் கதையின் உச்சம்.

* நடுவில் ஜாதிப் பிரச்சனையையும் புகுத்தி… நகரும் காட்சியில் ‘தீப்பொறி’.

‘சம்பள உயர்வு கேட்டு போராட்டம் நடத்துறீங்களே?.. என்னிக்காவது நீங்க இந்தப் பள்ளிக்கூடத்தோட தரத்தை உயர்த்தணும்னு போராடியிருக்கீங்களா?’

ஆசிரியர்களுக்கு ராட்சசி சாட்டையடி.

*விடலைப் பருவத்தில் முளைவிடும் காதல் உணர்வுக்கு ‘ராட்சசி’ சொல்லும் உபாயம். விழி திறக்கும்.

கண் சிமிட்டாமல் நடித்திருக்கும் ராட்சசி ஜோதிகா… அவரைப் போலவே கண் சிமிட்டாமல் அல்லவா பார்க்கும் நிலைக்குத் தள்ளியிருக்கிறார் நம்மையும்.

அப்பா இறந்த சோகம்…

பூர்ணிமாவின் மகனைக் காதலிக்க அவன் ‘திடீர்’ மரணத்தின் கொடுமை…

எதிர்ப்படும் சோதனைகளை சமாளித்து, நிலைகுலையாமல் நிற்கும் ‘ராட்சசி’ ஜோதிகாவுக்கு ஓர் ஃபிளாஷ்பேக்’, அந்த ராணுவ மேஜர். வாவ்… என்ன ஒரு கம்பீரம்? ராணுவ மேஜராய் நின்றார், ராட்சசியாய் வென்றார்!

அப்பா தெலுங்கு நாகநீடு, உதவி தலைமையாசிரியர் – கவிதா பாரதி, பதவி உயர்வு ட்ரான்ஸ்பர் வேண்டாம் என்று ஆசிரியையாகவே நீடிக்கும் மூத்த ஆசிரியை பூர்ணிமா பாக்யராஜ், ‘நொறுக்குத் தீனி’யோடே நகரும் ட்ரில் மாஸ்டர் சத்யன், தனியார் பள்ளி காப்பாளர் ஹரீஷ் பேரடி: லேசில் மறக்க முடியுமா?

இசை : சீன் ரோல்டன், காமிரா: கோகுல் பினோய், வசனம்: பாரதி தம்பி, கவுதம்ராஜ், தயாரிப்பு: ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் எஸ்.ஆர். பிரகாஷ்பாபு, எஸ்.ஆர். பிரபு.

எஸ்.ஆர். பிரகாஷ்பாபு

மாணவிகளிடம் தன்னை அறிமுகம் செய்துகொண்டு ‘நீங்கள் என் பேரைச் சொல்லியே கூப்பிடலாம்…’ என்று ஜோதிகா சொல்ல, ஒரு மாணவி, ‘கீதா’… என்று அழைப்பது…

6 வயசு பொடியன் ஜோதிகா உருவத்தை பென்சிலால் படம் வரைந்து அன்புப் பரிசாகக் கொடுப்பது…, ‘பொண் பாக்க வரட்டுமா, ஒன்னை…’ என்று விவரம் தெரியாமல் அதே பொடிசு ஜோதிகாவை கேட்பது வழக்கமான ரசனையில் ஒரு மாறுதலுக்காக!

‘ராட்சசி’ – ஆட்டோ டிரைவர் மூர்த்தி தமாஷாக வைக்கும் பெயரே, டைட்டிலாகி இருக்கிறது.

 

 

‘ராட்சசி’: அழகானவள்.

ஜோதிகாவை இன்னும் உயர்த்திப் பிடித்திருக்கிறார் அறிமுக இயக்குனர் எஸ்.கவுதம்ராஜ்.

திரையில் ஜோதிகா கேட்கும் 3 கேள்வி மாதிரி தான் இங்கும் நான் கேட்கிறேன்:

அப்பா…’ படம் பார்த்தீர்களா?

‘சாட்டை’ பார்த்தீர்களா?

அப்புறம் ஏன்,

ராட்சசியைப் பார்க்கக் கூடாது!

அரசு பள்ளிகள் பார்த்தாலே…

மூட்டை மூட்டையாய்

‘கல்லா’ கட்டலாமா, இல்லையா?

* * * 

இயக்குனர் கவுதம்ராஜ்

டைரக்டருக்கு 3 கேள்விகள்

* ஒரே போனில் அரசு நிர்வாகம் ‘கண்றாவி’ நிலை பள்ளியை எழில் தோற்றத்துக்கு மாற்றுவது நடைமுறை சாத்தியமா?

* பெயிலான 82 மாணவர்களையும் அரசு கல்வி அதிகாரிகளின் ஆணையை மீறி ‘பாஸ்’ போடுவதும் நடைமுறை சாத்தியமா?

* புதூர் கிராமமே ஜோதிகாவுக்கு ஆதரவாக இருக்கும்போது தந்தை இறந்த பின் தனி மனுஷியாக அவர் மட்டுமே மயானம் வருவது ஏனோ?

* * *

ஆர். புதூர் கிராமம். அரசுப் பள்ளி, அலங்கோலமான நிலையில். கண்றாவிக் கட்டிடம். ஒழுக்கமில்லா ஆசிரியப் பெருமக்கள். இஷ்டப்படி லூட்டி அடிக்கும் சிறுவர் – சிறுமிகள். சமூக அவலத்தில் கண் எதிரில் காட்டப்படும் அரசு பள்ளியை தரம் உயர்த்த சூளுரைத்து வரும் தலைமை ஆசிரியை ஜோதிகா. பள்ளி வளாகத்தில் காலடி எடுத்தது முதல்… ‘க்ளைமாக்ஸ்’ வரை நடந்தது என்ன? விறுவிறுப்பான ஒரு திரைக்கதையில் நாவலைப் படிக்கும் சுவையில் சூடு பறக்க வைத்திருக்கிறார் கவுதம் ராஜ், சபாஷ்.

* * *

-வீ. ராம்ஜீ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *