செய்திகள்

அனைத்து துறை அலுவலர்களுடன் காஞ்சீபுரம் மாவட்ட சிறப்பு கண்காணிப்பாளர்கள் ஆலோசனை

Spread the love

கொரோனா வைரஸ் நோய் தடுப்பு நடவடிக்கைகள்:

அனைத்து துறை அலுவலர்களுடன் காஞ்சீபுரம் மாவட்ட சிறப்பு கண்காணிப்பாளர்கள் ஆலோசனை

காஞ்சீபுரம், மே 23-

தமிழகத்தில் கொரோனா வைரஸ் தொற்று நோய் பரவாமல் தடுத்திட தமிழ்நாடு அரசு பல்வேறு சீரிய நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இந்நிலையில் மாவட்டம் முழுவதும் நான்காம் கட்ட ஊரடங்கு உத்தரவு சில தளர்வுகளுடன் அமலில் உள்ளதால் கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளில் பொதுமக்களுக்கு அத்தியாவசிய தேவைகளை பெற தகுந்த ஏற்பாடுகளை மாவட்ட நிர்வாகம் செய்து வருகிறது.

மேலும் கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளில் இருந்து பிற இடங்களில் கொரோனா வைரஸ் பரவாமல் தடுத்திட பாதிப்புக்குள்ளான இடங்கள் கண்டறியப்பட்டு மாவட்ட நிர்வாகத்தால் தனிமைப் படுத்தப்பட்டுள்ளது.

காஞ்சீபுரம் மாவட்டத்தில் கொரோனா வைரஸ் பரவலை தடுத்திட மாவட்ட நிர்வாகத்தால் செய்யப்பட்டுள்ள தடுப்பு நடவடிக்கைகள் குறித்து கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் அனைத்துத் துறை அலுவலர்களுடன் காஞ்சீபுரம் மாவட்ட சிறப்பு கண்காணிப்பாளர்களான தமிழ்நாடு மறுவரையறை ஆணைய உறுப்பினர் செயலர் முனைவர் இல.சுப்பிரமணியன் மற்றும் தமிழ்நாடு கடலோர காவல்படை காவல்துறை துணைத்தலைவர் பவானீஸ்வரி ஆகியோர் தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

இக்கூட்டத்தில் காஞ்சீபுரம் மாவட்டத்தில் தனிமைப்படுத்தப் பட்ட பகுதிகளில் எடுக்கப்பட்டு வரும் தீவிர தடுப்பு நடவடிக்கைகள் குறித்து கலந்தாலோசிக்கப்பட்டது. மேலும் கட்டுப்படுத்தப்பட்ட பகுதி களில் தடுப்பு நடவடிக்கைகளை கண்காணித்திட அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது.

மேலும் தனிமைப்படுத்தப்பட்ட பகுதியான வார்டு 35, கோட்டா ராம்பாளையம் தெருவில் மக்கள் நடமாட்டத்தை முற்றிலும் தவிர்த்திடும் பொருட்டு தடுப்புகள் அமைக்கப்பட்டுள்ளதை காஞ்சீபுரம் மாவட்ட சிறப்பு கண்காணிப்பாளர்கள் இல.சுப்பிரமணியன் மற்றும் பவானீஸ்வரி ஆகியோர் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தனர். அப்பகுதி பொதுமக்களுக்கு தேவை யான அத்தியாவசியப் பொருட்கள் கிடைத்திட மாவட்ட நிர்வாகத்தால் எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் குறித்து அலுவலர்களிடம் கேட்டறிந் தனர்.

பிறகு காஞ்சீபுரம் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் கொரோனா வைரஸினால் பாதிப்படைந்த நோயாளிகள் சிகிச்சை பெற்று வரும் பகுதிகளை பார்வையிட்டு சுகாதாரப் பணிகளை ஆய்வு செய்து மருத்துவப் பணியாளர்களுக்கு தேவையான தடுப்பு உபகரணங்கள் இருக்கிறதா என கேட்டறிந்தனர்.

அதனைத் தொடர்ந்து மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் காஞ்சீபுரம் அண்ணா பல்கலைக்கழகத்தில் தனிமைப்படுத்தப்பட்டு உள்ள வர்களுக்கு தேவையான சுகாதாரப் பணிகள் மற்றும் அத்தியாவசிய பொருட்களின் இருப்புகளை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.

பொதுமக்கள் அத்தியாவசிய பொருட்கள் வாங்குவதற்காக வையாவூரில் அமைக்கப்பட்டுள்ள தற்காலிக காய்கறி சந்தை மற்றும் மளிகை பொருட்கள் பல்பொருள் அங்காடியினை பார்வையிட்டு பொதுமக்கள் முகக்கவசத்துடன் சமூக இடைவெளி கடைபிடித்து பொருட்கள் வாங்குவதற்கு மாவட்ட நிர்வாகத்தால் செய்யப்பட்டுள்ள ஏற்பாடுகளை அவர்கள் பார்வை யிட்டனர். இந்த ஆய்வு கூட்டத்தில் மாவட்ட கலெக்டர் பா.பொன்னையா, காவல் துறை சரக துணைத்தலைவர் தேன்மொழி, வருவாய்த்துறை அதிகாரி என்.சுந்தரமூர்த்தி, சப் கலெக்டர் சரவணன், நகராட்சி ஆணையர் ஆர்.மகேஸ்வரி, என்ஜினியர் மகேந்திரன் மற்றும் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *