செய்திகள்

அனைத்து சாதி அர்ச்சகர் நியமனம்: தடைவிதிக்க உயர்நீதிமன்றம் மறுப்பு

சென்னை, அக். 20–

பயிற்சி பெற்ற அனைத்து சாதியினரையும் அர்ச்சகராக நியமனம் செய்யலாம் என்பது தொடர்பாக, அறநிலையத்துறை வகுத்துள்ள புதிய விதிகளுக்கு இடைக்கால தடைவிதிக்க முடியாது என்று சென்னை உயர்நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது.

அனைத்து சாதியினரும் அர்ச்சகராகலாம் என்ற சட்டப்படி, தமிழ்நாடு அரசின் அறநிலையத்துறை, பயிற்சி பெற்ற அனைத்து சாதி அர்ச்சகர்களையும் நியமனம் செய்ய வசதியாக, புதிய விதிகளை வகுத்து, அர்ச்சகர் நியமனங்களை செய்து இருந்தது. இதனை எதிர்த்து, கோயில் அறங்காவலர்கள் மட்டுமே அர்ச்சகர்களை நியமிக்க முடியும் என்று, ரமேஷ் என்பவர் வழக்கு தொடுத்து இருந்தார். அந்த வழக்கு உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி சஞ்சீப் பானர்ஜி, ஆதிகேசவலு அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தது.

தடைவிதிக்க முடியாது

3 ஆண்டு பயிற்சி முடித்த 18 முதல் 35 வயதுக்குட்பட்டவர்களை மட்டுமே நியமிக்கலாம் என்று இந்து சமய அறநிலைய துறையின் புதிய விதிகளுக்கு தடை விதிக்க முடியாது என்று உயர்நீதி மன்ற தலைமை நீதிபதி அமர்வு நிராகரித்துள்ளது. மேலும் 4 வாரத்தில் தமிழ்நாடு அரசு பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கை தள்ளி வைத்துள்ளது. அத்துடன் அர்ச்சகர் பணி நியமனங்கள் இறுதி உத்தரவுக்கு கட்டுப்பட்டது என்றும் கூறியுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *