போஸ்டர் செய்தி

அண்ணா தி.மு.க.வில் 1 கோடியே 11 லட்சம் உறுப்பினர்கள்

சென்னை, அக்.11–

அண்ணா தி.மு.க.வில் 1 கோடியே 10 லட்சத்து 41 ஆயிரத்து 600 புதிய உறுப்பினர்கள் உள்ளனர் என்று அண்ணா தி.மு.க. ஒருங்கிணைப்பாளரும், துணை முதலமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம், கழக இணை ஒருங்கிணைப்பாளரும் முதலமைச்சருமான எடப்பாடி பழனிசாமி ஆகியோர் இன்று தெரிவித்தார்கள்.

இன்னும் 6 வாரத்தில் மேலும் 50 லட்சம் உறுப்பினர்கள் சேர்ப்பு மற்றும் புதுப்பிப்பு நடைபெறும் என்று அவர்கள் தெரிவித்தார்கள்.

அண்ணா தி.மு.க.வில் புதிய உறுப்பினர் புதுப்பிப்பு மற்றும் புதிய உறுப்பினர்கள் சேர்ப்பு நிகழ்ச்சி முடிந்த பின் இன்று உரியவர்களுக்கு புதிய உறுப்பினர் உரிமை சீட்டு வழங்கும் நிகழ்ச்சி அண்ணா தி.மு.க. தலைமை கழகத்தில் நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சியில் அண்ணா தி.மு.க. தலைமை கழக நிர்வாகிகள், மாவட்ட செயலாளர்கள், அணி செயலாளர்கள் உட்பட ஏராளமான பேர் கலந்துகொண்டனர்.

முதல் உறுப்பினர் உரிமைச் சீட்டை கழக ஒருங்கிணைப்பாளரும், துணை முதலமைச்சருமான ஓ.பன்னீர்செல்வத்துக்கு இணை ஒருங்கிணைப்பாளரும் முதலமைச்சருமான எடப்பாடி பழனிசாமி வழங்கினார். எடப்பாடி பழனிசாமிக்கு உறுப்பினர் உரிமை சீட்டை ஓ.பன்னீர்செல்வம் வழங்கினார்.

பின்னர் அவைத்தலைவர் மதுசூதனன் மற்றும் துணை ஒருங்கிணைப்பாளர்கள் ஆர்.வைத்திலிங்கம், கே.பி. முனுசாமி ஆகியோருக்கு வழங்கப்பட்டது.

ஓ.பன்னீர்செல்வம்

இந்த நிகழ்ச்சிக்குப் பின் ஓ.பன்னீர்செல்வம் பேசினார்.

எம்.ஜி.ஆரால் இந்த இயக்கம் உருவாக்கப்பட்டு அம்மாவால் வளர்த்தெடுக்கப்பட்டது. அம்மாவின் மறைவுக்குப் பின் சிந்தாமல் சிதறாமல் இந்த இயக்கம் நம்மிடம் உள்ளது. அம்மா 28 ஆண்டு காலம் பொதுச் செயலாளராக இருந்தார். எத்தனையோ வேதனைகள், சோதனைகளை தாங்கி 1½ கோடி தூய தொண்டர்கள் கொண்ட இயக்கமாக எந்த கொம்பாதி கொம்பனாலும் அசைக்க முடியாத எக்கு கோட்டையாக உள்ளது. தொண்டர்கள் இயக்கமாக அம்மா உருவாக்கினார். இன்று தொண்டர்கள் இந்த இயக்கத்தை நடத்தி கொண்டிருக்கிறார்கள். இது தான் எம்.ஜி.ஆர். – ஜெயலலிதாவுக்கு நாம் செலுத்தும் நன்றி கடன் ஆகும்.

உறுப்பினர்கள் புதுப்பிப்பு, புதிய உறுப்பினர்கள் சேர்த்தல் பணியை முழுமையாக ஈடுபட்டு பணியை நிறைவாக செய்த நிர்வாகிகள், பொறுப்பாளர்கள், தொண்டர்களுக்கு நன்றியையும் வாழ்த்துக்களையும் தெரிவித்து கொள்கிறேன்.

தமிழகம் முழுவதும் அனைத்து மாவட்டங்களிலும் கழக தொண்டர்கள் பூர்த்தி செய்து கொடுத்த 4 லட்சத்து 38 ஆயிரத்து 87 படிவம் பெறப்பட்டது. அதாவது மொத்த உறுப்பினர்கள் எண்ணிக்கை 1 கோடியே 9 லட்சத்து 52 ஆயிரத்து 25 ஆகும். பிற மாநிலங்களில் 3583 படிவங்கள் பெறப்பட்டது. அதன் மூலம் 89 ஆயிரத்து 575 உறுப்பினர்கள் சேர்க்கப்பட்டன. மொத்தத்தில் அண்ணா தி.மு.க. புதிய உறுப்பினர்கள் எண்ணிக்கை 1 கோடியே 10 லட்சத்து 41 ஆயிரத்து 600 ஆகும். அதாவது இன்று வரை இவ்வளவு உறுப்பினர்கள் பதிவு செய்திருக்கிறார்கள். 90 நாட்களில் நடந்த வரலாற்று சிறப்பு சாதனை இது. இப்போது 60 லட்சம் புதிய உறுப்பினர்களுக்கு உரிமை சீட்டு வழங்கும் பணி துவக்கி வைக்கப்படுகிறது. மேற்கொண்டு சேர்ந்த உறுப்பினர்களுக்கு உரிமை சீட்டு அச்சடிக்கும் பணி நடந்து வருகிறது.

இவ்வாறு துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் கூறினார்.

எடப்பாடி பழனிசாமி

முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பேசியதாவது:–

1972–ம் ஆண்டு இந்த இயக்கத்தை எம்.ஜி.ஆர். துவக்கினார். துவங்கிய நாளில் இருந்து பல்வேறு இன்னல்கள், இடர்பாடுகள், துன்பங்கள் வந்தன. அதனை எல்லாம் தாங்கி கொண்டு நாட்டு மக்களுக்கு நல்லாட்சி தந்தார். அண்ணா கண்ட கனவை நனவாக்கினார். எம்.ஜி.ஆர். மறைவுக்குப் பின் அம்மா இந்த இயக்கத்தை நடத்திய போதும் அதே துன்பம், இடர்பாடுகள், வேதனைகள் வந்தது. அம்மா அத்தனையையும் தாங்கி கொண்டு தனது உயிருக்கு ஆபத்து ஏற்படும் நிலையிலும் இந்த இயக்கத்தை கட்டிக்காத்து எம்.ஜி.ஆர். விட்டு சென்ற பணியை தொடர தன்னை இந்த இயக்கத்துக்கு அர்ப்பணித்து கட்டுப்பாடான இயக்கம் என்பதை நாட்டுக்கு பறை சாற்றினார். சோதனைகளை எல்லாம் தாங்கி அதனை வெற்றி படிக்கட்டுகளாக்கி, அண்ணா தி.மு.க.வை தமிழகத்தில் மட்டுமல்ல, இந்தியாவில் மட்டுமல்ல, வெளிநாட்டிலும் பரவும் வகையில் கழகத்தை வளர்த்தார்.

சதிகாரர்கள்

எம்.ஜி.ஆர், ஜெயலலிதா வழியில் பணியை நாம் தொடர்ந்து செய்து வரும்போது சில சதிகாரர்கள் சதி செய்தனர். இந்த இயக்கத்தை வீழ்த்த நினைத்தார்கள். அனைத்தையும் சந்தித்து எம்.ஜி.ஆர் – ஜெயலலிதா லட்சியத்தை நிறைவேற்றி வருகிறோம்.

அம்மா மறைவுக்குப் பின் முதல்முறையாக அண்ணா தி.மு.க.வில் புதிய உறுப்பினர் சேர்ப்பு, மற்றும் புதுப்பிப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இதுவரை 1 கோடியே 10 லட்சத்து 41 ஆயிரத்து 600 உறுப்பினர்கள் சேர்க்கப்பட்டுள்ளனர். அம்மா இருந்த போது கழகத்தில் 1½ கோடி உறுப்பினர்கள் இருந்தனர். இந்த குறுகிய காலத்தில் 1 கோடியே 10 லட்சத்து 41 ஆயிரத்து 600 உறுப்பினர்கள் சேர்க்கப்பட்டுள்ளனர். கழகத்திற்கு வலு சேர்க்கும் பணியை இன்று துவக்கியுள்ளோம்.

இன்று 6 வாரத்தில் 50 லட்சம் உறுப்பினர்கள் சேர்ப்பு மற்றும் புதுப்பிப்பு நடைபெறும்.

அம்மா இருந்த போது 1 கோடியே 50 லட்சம் உறுப்பினர்கள் இருந்தார்கள். இப்போது மேலும் கூடுதலாக உறுப்பினர்கள் சேர்க்கப்படுவார்கள். பொதுமக்கள் கழகத்தின் மீது பற்று வைத்திருக்கிறார்கள்.

எம்.ஜி.ஆர். – ஜெயலலிதா ஆகிய 2 தலைவர்களின் எண்ணங்களை லட்சியத்தை நிறைவேற்றுவோம்.

இவ்வாறு எடப்பாடி பழனிசாமி பேசினார்.

மதுசூதனன்

அவைத்தலைவர் மதுசூதனன் பேசும்போது, எடப்பாடி பழனிசாமியும், ஓ.பன்னீர்செல்வமும் இரட்டை குழல் துப்பாக்கியாக இருந்து செயல்படுவார்கள். இந்த இயக்கத்தின் மீது மக்கள் மிகுந்த நம்பிக்கை வைத்திருக்கிறார்கள். இந்த இயக்கத்தை மேலும் மேலும் வளர்ப்போம். அது தான் நாம் எம்.ஜி.ஆருக்கும், அம்மாவுக்கும் செலுத்தும் நன்றி கடன் ஆகும் என்று கூறினார்.

கழக துணை ஒருங்கிணைப்பாளர்கள் கே.பி.முனுசாமி, ஆர்.வைத்திலிங்கம் எம்.பி. ஆகியோரும் பேசினார்கள்.

ஓ.பி.எஸ். எடப்பாடி கையெழுத்து

புதிய உறுப்பினர் உரிமை சீட்டில் அண்ணா, எம்.ஜி.ஆர். படங்கள் மேல் பகுதியிலும், அதன் கீழ் பகுதியில் ஓ.பன்னீர்செல்வம் – எடப்பாடி பழனிசாமி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *