தேனாம்பேட்டை அரசு தொடக்கப்பள்ளி ஆண்டு விழாவில் மாணவர்களுக்கு பரிசு

சென்னை, மார்ச் 11– வன்னிய தேனாம்பேட்டை அரசு தொடக்கப்பள்ளி ஆண்டு விழாவில் கலந்துகொண்ட ‘மக்கள் குரல்’ ஆசிரியர் ஆர்.முத்துக்குமார், போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்கள், பெற்றோர், ஆசிரியர் களுக்கு பரிசுகள் வழங்கி பாராட்டினார். சென்னை வன்னிய தேனாம்பேட்டையிலுள்ள திருவள்ளுவர் சாலை, சென்னை தொடக்கப் பள்ளியின் ஆண்டுவிழா, நேற்று மாலை நடைபெற்றது. இந்த விழாவிற்கு வருகை தந்தவர்களை, தலமை ஆசிரியர் யசோதா வரவேற்று பேசினார். சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட ‘மக்கள் குரல்’, ‘டிரினிட்டி மிரர்’ நாளிதழ்களின் ஆசிரியர் […]

மக்கள் குரல் ஆசிரியர் ஆர்.முத்துக்குமார் ஏற்பாட்டில் கோடம்பாக்கம் ஓரியன் ஆர்ட் கேலரியில் 5 ஓவியர்களின் தீப ஒளி ஓவிய கண்காட்சி

சென்னை,அக்.17– சென்னை, கோடம்பாக்கத்திலுள்ள ஓரியன் ஆர்ட் கேலரியில் ஓவிய ‘தீப ஒளி’ கண்காட்சியில் 5 ஓவியர்களின் படைப்பான 50க்கும் மேற்பட்ட ஓவியங்கள் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளது. 22ந் தேதி வரை நடைபெறும் இந்த ஓவியக் கண்காட்சிக்கு மக்கள் குரல் – டிரினிட்டி மிரர் ஆசிரியர் ஆர்.முத்துக்குமார் ஏற்பாடு செய்திருந்தார். இக்கண்காட்சியை வி.ஜி.பி தலைவர் சந்தோஷம் துவக்கி வைத்தார். விழாவில் மக்கள் குரல் ஆசிரியர் ஆர்.முத்து குமார் கலந்துகொண்டார். கண்காட்சி குறித்து விஜிபி குரூப் தலைவர் சந்தோஷம் கூறியதாவது:– ஓவியம் […]

‘‘மகளிர் மேளா நவராத்திரி கொண்டாட்டம்” விற்பனைக் கண்காட்சி கோலாகல ஆரம்பம்

சென்னை, செப். 13– தமிழ்நாடு அரசு, தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவனத்தின் மூலம், தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களைச் சார்ந்த மகளிர் சுய உதவிக் குழுக்களின் உற்பத்தி பொருட்களை சந்தைப்படுத்திடும் நோக்கிலும், விற்பனை வாய்ப்பினை மேம்படுத்திடும் வகையில் சென்னையில் மாநில அளவில் பண்டிகை மற்றும் விடுமுறை காலங்களில் விற்பனை கண்காட்சிகளை நடத்தி வருகிறது. அதன் ஒரு பகுதியாக சென்னை, நுங்கம்பாக்கம், வள்ளுவர் கோட்டம் நெடுஞ்சாலையில் உள்ள அன்னை தெரசா மகளிர் வளாகத்தில் மகளிர் மேளா நவராத்திரி கொண்டாட்டம் […]

கர்நாடக இசை பாடகர் டி.எம்.கிருஷ்ணாவுக்கு இந்திரா சிவசைலம் அறக்கட்டளை விருது

சென்னை, ஆக். 26– பாரம்பரிய கர்நாடக இசையை வளர்க்கும் இளம் கலைஞர்களை ஊக்குவிக்க சிம்சன் குரூப்  அதிகர் சிவசைலத்தின் மனைவி இந்திரா சிவசைலம், மியூசிக் அகாடமியுடன் இணைந்து பரிசு, விருது வழங்க ஏற்பாடு செய்தார். இவரது விருப்பத்தை இவரது மகளும் டாபே குரூப் சேர்மனுமான மல்லிகா சீனிவாசன் தொடர்ந்து ஊக்கமளித்து நிறைவேற்றி வருகிறார். இந்த ஆண்டுக்கான இந்திரா சிவசைலம் அறக்கட்டளை விருது, பரிசுக்கு பாரம்பரிய கர்நாடக இசை பாடகர் டி.எம்.கிருஷ்ணா தேர்வு செய்யப்பட்டுள்ளார். இந்த விருது வழங்கும் […]

பூம்புகார் ஷோரூமில் வினாயகர் சிலைகள் கண்காட்சி, விற்பனை

சென்னை, ஆக. 21– சென்னை பூம்புகார்  விற்பனை நிலையத்தில் சென்ற ஆண்டுகளைப் போலவே ‘கணபதி தரிசனம்’ என்ற பெயரில் வினாயகர் சிலைகளுக்கான கண்காட்சி மற்றும் விற்பனை தொடங்கியது. இந்த கண்காட்சியினை ஊரக தொழில் மற்றும் தொழிலாளர் நலத்துறை அமைச்சர் ப.மோகன் துவக்கி வைத்தார். இக்கண்காட்சியில் பஞ்சலோகம், பித்தளை, செம்பு, நூக்கமரம், சந்தன மரம்,  நாட்டு மரம், வெண் மரம், வெள்ளெருக்கு, பளிங்குக்கல், கருங்கல், மாக்கல், பச்சைக்கல், மார்பில் துகள், நவரத்தினக்கற்கள், சுட்டமண், காகிதக்கூழ், தஞ்சை ஓவியங்கள், ஜெய்ப்பூர் […]

சத்யராஜ் நடிக்கும் 200-வது படம் நாகராஜசோழன் எம்.ஏ., எம்.எல்.ஏ: மணிவண்ணன் இயக்கும் 50-வது படம்;

‘நாகராஜ சோழன் எம்.ஏ., எம்.எல்.ஏ- 1994-ம் ஆண்டு வெளிவந்து ஓஹோ என்று வெற்றி பெற்ற ‘அமைதிப்படை’ ஜனரஞ்சக சித்திரத்தின் 2-ம் பாகம் இது. மணிவண்ணன் இயக்கும் 50-வது படம்; சத்யராஜ் நடிக்கும் 200-வது படம் என்பதும் இப்படத்துக்கு இன்னொரு தனிச்சிறப்பு. வி.ஹவுஸ் புரொடக்ஷன்ஸ் சார்பில் சுரேஷ் காமாட்சி, எஸ்.ரவிச்சந்திரன் தயாரிக்கிறார்கள். இதன் பாடல்கள், ட்ரெயிலர் வெளியீட்டு விழா வடபழனியில் உள்ள க்ரீன்பார்க் ஓட்டலில் நாளை (ஞாயிற்றுக்கிழமை) மாலை 6-30 மணிக்கு நடைபெறுகிறது. எஸ்.ஏ.சந்திரசேகர் முன்னிலை வகிக்க பாடல்களை […]

காட்டெருமைகள் படையெடுத்ததால் பயந்து நடுங்கிய நடிகர்-நடிகைகள்

கொடைக்கானல், மார்ச் 12- கொடைக்கானலில் ‘சுட்டகதை’ என்ற தமிழ்ப் படத்தின் படப்பிடிப்பு நடந்து கொண்டிருந்தபோது, திடீரென்று காட்டெருமை கள் கூட்டம் படை எடுத்ததால், நடிகர் – நடிகைகள் பயந்து நடுங்கினார்கள். இதனால் படப்பிடிப்பு சுமார் 2 மணி நேரத்திற்கு நிறுத்தப் பட்டது. லிப்ரா புரொடக்ஷன்ஸ் சார்பில் ரவீந்தர் சந்திரசேகர் தயாரிக்கும் படம் சுட்டகதை”. பாலாஜி கதாநாயகனாக நடிக்கிறார். இன்னொரு நாயகனாக யூ டியூப் வெங்கி, கதாநாயகியாக லஷ்மி பிரியா நடிக்கிறார்கள். நாசர், ஜெயபிரகாஷ், எம்.எஸ்.பாஸ்கர், ஜெயமணி, ரின்சன், […]

8 ஆண்டுகளுக்கு பின் ஆர்.பி.சவுத்ரி படத்தில் விஜய்

8 ஆண்டு இடைவெளிக்குப் பின் மீண்டும் ஆர்.பி.சவுத்ரியின் தயாரிப்பில் விஜய் நடிக்கிறார். படம் ‘ஜில்லா.’ நூற்றாண்டை கொண்டாடிக் கொண்டிருக்கும் இந்திய சினிமாவில் புது வசந்தம் மூலம் தயாரிப்புத் துறையில் கால் பதிந்து 25 ஆண்டுகளைத் தொட்டு வெள்ளி விழா காணும் ஆர்.பி.சளத்ரியின் சூப்பர் குட் பிலிம்ஸ் பட நிறுவனத்தின் 850-வது படைப்பு இது. ‘பூவே உனக்காக, லவ்டுடே, ஷாஜகான், ‘துல்லாத மனமும் ’துள்ளும்’ திருப்பாச்சி, என விஜய் நடித்து சூப்பர் குட் பிலிம்ஸ் தயாரித்த அத்தனைப் படங்களுமே […]

ரிஷிகேஷ் சுற்றுலா சென்ற தெலுங்கு நடிகர் ஆற்றில் மூழ்கி பலி

ஐதராபாத், மார்ச் 10- ரிஷிகேஷ் சுற்றுலா சென்ற தெலுங்கு நடிகர் ஆற்றில் மூழ்கி பலியானார். பிரபல தெலுங்கு நடிகர் மகேஷ் பாபு நடித்த முராரி படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானவர் நர்லா தேஜா (வயது 17). இவர் பல படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்து இருக்கிறார். இவர் சினிமா ஒளிப்பதிவாளர் ஸ்ரீதரின் மகன் ஆவார். பஞ்சாப் மாநிலம் அமிர்தசரசில் உள்ள மிர்பாரி அகாடமியில் படித்து வந்தார். கடந்த 5-ந்தேதி நர்லா தேஜா மற்றும் 20 மாணவர்கள் ரிஷிகேஷில் […]

இந்திய சினிமாவுக்கு பெருமை:

 பி.என்.ஆர். குமரவேலின்  ‘ஹரிதாஸ் முதல்நாள் – முதல் ஷோவில் ‘பேனர் வால்யூ’ உச்சநட்சத்திரங்களான படங்களைப் பார்த்தே ஆக வேண்டும் என்று கங்கணம் கட்டிக் கொண்டு தியேட்டர்களை முற்றுகையிட்டு, ஆசையைப் பூர்த்தி செய்து கொண்ட வருக்கும், ரசிகர்களுக்கும் ஒரு வார்த்தை; ‘ப்ளீஸ், ஜி.என்.ஆர். குமரவேல் இயக்கத்தில் திரைக்கு வந்து, ‘மவுனப் புரட்சி’ செய்து கொண்டிருக்கும் ‘ஹரிதாஸ்’ படத்தை ஒரு தடவை பாருங்களேன்’. என்னுடைய இந்த அன்புக் கட்டளையை ஏற்று- ‘ஹரிதாஸை’ பார்த்து விட்டீர்களேயானால், என்னமாய் ஒரு படம் எடுத்திருக் […]

1 2 3