டெல்லியில் உச்சக்கட்ட பாதுகாப்பு ஓடும் பஸ்சில் கற்பழிக்கப்பட்ட மாணவி இன்று காலை மரணம் சிங்கப்பூர் மருத்துவமனையில் உயிர் பிரிந்தது

சிங்கப்பூர், டிச. 29- ஓடும் பஸ்சில் கற்பழிக்கப்பட்ட மாணவி இன்று காலை சிங்கப்பூர் மருத்துவமனையில் உயிர் இழந்தார். இதையடுத்து டெல்லியில் உச்சக்கட்ட பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. டெல்லியில் கடந்த 16-ந்தேதி ஓடும் பஸ்சில் 23 வயது மருத்துவ மாணவி 6 பேர் கும்பலால் கற்பழிக்கப்பட்டு மிகக் கொடுமையாக தாக்கப்பட்டார். போதையில் இருந்த அந்த கும்பல் இரும்பு கம்பியால் தாக்கியதில் அந்த மாணவி உடல் முழுவதும் படுகாயம் ஏற்பட்டது. சப்தர் ஜங் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவருக்கு வயிற்றில் செய்யப்பட்ட […]

காற்றழுத்த தாழ்வு நிலை தீவிரம் தமிழகத்தில் 2 நாட்கள் மழை எச்சரிக்கை சென்னையில் பலத்த மழை

சென்னை, டிச. 29- காற்றழுத்த தாழ்வு நிலை தீவிரமடைந்துள்ளதால், தமிழகத்தில் 2 நாட்கள் மழை நீடிக்கும் என வானிலை ஆய்வு மழை தெரிவித்துள்ளது. சென்னையில் பலத்த மழை பெய்துள்ளது. வங்க கடலில் இலங்கைக்கு அருகே உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக தமிழ்நாட்டின் கடலோர மாவட்டங்களில் நேற்றும், இன்றும் மழை பெய்து வருகிறது. இந்த காற்றழுத்த தாழ்வு நிலை தற்போது வலுவடைந்து ஆந்திராவை ஒட்டியுள்ள வங்க கடல் பகுதியில் நிலை கொண் டுள்ளதாக வானிலை ஆய்வு […]

ஜெயலலிதாவை அவமதித்த செயல் உலகத் தமிழர்களை அவமானப்படுத்திய செயல்; சிறுபிள்ளைத்தனமாகும்" இந்திய சிறுபான்மை கூட்டமைப்பின் தலைவர் பிஷப் டாக்டர் எம். பிரகாஷ் கண்டனம்

சென்னை, டிச. 29- டெல்லியில் நடந்த முதல்வர்கள் மாநாட்டில் ஜெயலலிதாவை அவமதித்த செயல் உலகத் தமிழர்களை அவமானப்படுத்திய செயல்; சிறுபிள்ளைத்தனமாகும்” என்று இந்திய சிறுபான்மை கூட்டமைப்பின் தலைவர் பிஷப் டாக்டர் எம். பிரகாஷ் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து இந்திய சிறுபான்மை கூட்டமைப்பு தலைவர் பிஷப் எம்.பிரகாஷ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- மத்தியில் ஆளும் காங்கிரஸ் கூட்டணி அரசு தனது கூட்டணியில் அங்கம் வகிக்காத கட்சிகள் ஆளும் மாநிலங்களை மாற்றான் தாய் மனப்பான்மையுடன் நடத்தி வருகிறது. தமிழகத்திற்கு […]

ஜெயலலிதாவை அவமதித்த செயல் உலகத் தமிழர்களை அவமானப்படுத்திய செயல்; சிறுபிள்ளைத்தனமாகும்” இந்திய சிறுபான்மை கூட்டமைப்பின் தலைவர் பிஷப் டாக்டர் எம். பிரகாஷ் கண்டனம்

சென்னை, டிச. 29- டெல்லியில் நடந்த முதல்வர்கள் மாநாட்டில் ஜெயலலிதாவை அவமதித்த செயல் உலகத் தமிழர்களை அவமானப்படுத்திய செயல்; சிறுபிள்ளைத்தனமாகும்” என்று இந்திய சிறுபான்மை கூட்டமைப்பின் தலைவர் பிஷப் டாக்டர் எம். பிரகாஷ் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து இந்திய சிறுபான்மை கூட்டமைப்பு தலைவர் பிஷப் எம்.பிரகாஷ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- மத்தியில் ஆளும் காங்கிரஸ் கூட்டணி அரசு தனது கூட்டணியில் அங்கம் வகிக்காத கட்சிகள் ஆளும் மாநிலங்களை மாற்றான் தாய் மனப்பான்மையுடன் நடத்தி வருகிறது. தமிழகத்திற்கு […]

நாளை அமெரிக்க அதிபர் தேர்தல்

வாஷிங்டன், நவ. 5- அமெரிக்காவின் புதிய அதிபரைத் தேர்வு செய்வதற்கான தேர்தல் நாளை நடைபெறுகிறது. தற்போது அதிபராக இருந்து வரும் ஜனநாயக கட்சியை சேர்ந்த ஒபாமாவின் பதவிக் காலம் அடுத்த ஆண்டு ஜனவரி மாத துவக்கத்தில் முடிவடைகிறது. இந்த தேர்தலில் ஜனநாயக கட்சியின் சார்பில் ஒபாமா மீண்டும் போட்டியிடு கிறார். அவரை எதிர்த்து குடியரசு கட்சியின் சார்பில் முன்னாள் கவர்னர் மிட் ரோம்னி நிறுத்தப்பட்டுள்ளார். இந்த நிலையில் இருவரும் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வந்தனர். தொலைக்காட்சியில் இருவரும் […]

ஜெயலலிதா தலைமையில் 12 தொழில் நிறுவனங்கள் ஒப்பந்தம் கையெழுத்து

சென்னை, நவ. 5- தொழில் துறை வரலாற்றில்  முதன் முறையாக இன்று முதலமைச்சர் ஜெயலலிதா தலைமையில் 12 தொழில் நிறுவனங்கள் புரிந்துணர்வு ஒப்பந்தங் கள்  செய்துள்ளன. 12 தொழில் நிறுவனங்களும்                       20 ஆயிரத்து  925 கோடி ரூபாய் தொழில் முதலீடுகள் செய்துள்ளன. இதன் மூலம்  1 லட்சத்து                         36 ஆயிரத்து 855 பேருக்கு வேலை வாய்ப்பு கிடைக்கும். சென்னை  கிண்டியில் உள்ள  ஐடிசி கிராண்ட் சோழா ஓட்டலில்  நடந்த விழாவில் இன்று தொழில் ஒப்பந்தங்கள் கையெழுத்தாயின. ஒவ்வொரு […]

கர்னாடக அரசுக்கு எதிராக நீதிமன்ற அவமதிப்பு வழக்கு: ஜெயலலிதா அறிவிப்பு

சென்னை, அக். 9- உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பை அவமதிக்கும் வகையில் தமிழகத்திற்கு உரிய பங்கினை தர மறுக்கும் கர்னாடக அரசுக்கு எதிராக நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர முதலமைச்சர் ஜெயலலிதா முடிவு செய்துள்ளார். இது குறித்து தமிழக அரசு இன்று வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:- காவேரியில் தமிழகத்திற்கு உரிய பங்கினை பெற்றே தீர வேண்டும் என்ற முதலமைச்சர் ஜெயலலிதாவின் உறுதியான நடவடிக்கை மற்றும் விடாமுயற்சி காரணமாக, காவேரி நதிநீர் ஆணைய உத்தரவின்படி 20.9.2012 முதல் 15.10.2012 வரை நாளொன்றுக்கு […]

ஜெயலலிதா தொடர்ந்த அவதூறு வழக்கில் இன்று ராமதாஸ் கோர்ட்டில் ஆஜர்

சென்னை, அக். 9- முதலமைச்சர் ஜெயலலிதா தொடர்ந்த அவதூறு வழக்கில் பா.ம.க. தலைவர் ராமதாஸ் இன்று கோர்ட்டில் ஆஜரானார். கடந்த 1.8.2012-ந்தேதி அன்று ஆனந்த விகடன் வாரப் பத்திரிக்கை ராமதாசின் பேட்டியை வெளியிட்டிருந்தது. ‘மாதக் கணக்கில் மலையிலா’ என்ற தலைப்பில் வெளியிடப்பட்டிருந்த அந்த பேட்டி யில் முதலமைச்சர் கொடநாட்டில் ஓய்வு எடுப்பதாக கூறியிருந்தார். அவரது பேட்டி அவதூறு ஏற்படுத்தக் கூடியது என்று முதலமைச்சர் ஜெயலலிதா சார்பில் சென்னை மாநகர வழக்கறிஞர் எம்.எல். ஜெகன் சென்னை முதன்மை செசன்ஸ் […]

1 8 9 10